சுவேதா மேனனின் பிரசவ காட்சியை எல்லோருக்கும் காட்டலாம்... சென்சார் போர்டு
திருவனந்தபுரம்: மலையாள கவர்ச்சி நடிகை சுவேதா மேனனின் பிரசவத்தை நேரடியாகப் படம் பிடித்து அதை திரைப்படத்தில் இணைத்துள்ளதற்கு சென்சார் போர்டு ஆட்சேபனை தெரிவிக்காமல் அனுமதித்துள்ளது.
மலையாளத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சுவேதா மேனன். தமிழிலும் இவர் சினேகிதியே, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவர் நடித்த களிமண்ணு என்ற படம் சமீபத்தில் சர்ச்சையைக் கிளப்பியது.

பிளஸ்ஸி இயக்கத்தில்
இயக்குநர் பிளஸ்ஸியின் களிமண்ணு படத்தில் சுவேதா மேனன் நாயகியாக நடித்துள்ளார்.

ஒரு பெண்ணின் கதா....
இந்தப் படம் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாகும்.

படப்பிடிப்பின்போது கர்ப்பம்
படம் உருவாகிக் கொண்டிருந்தபோதே திருமணம் செய்தார் சுவேதா. மேலும் கர்ப்பமும் அடைந்தார்.

'லைவ்' பிரசவம்
இந்த நிலையில் படத்தில் இடம் பெறும் பிரசவக் காட்சியை தத்ரூபமாக காட்ட நினைத்த பிளஸ்ஸி, சுவேதாவின் பிரசவத்தையே நேரடியாக படம் பிடித்து படத்தில் சேர்க்க தீர்மானித்தார். சுவேதாவும் இதற்கு ஒத்துக் கொண்டார்.

நேரடி படப்பிடிப்பு
இதையடுத்து சுவேதா மேனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குப் பிரசவம் நடந்தபோது அதை நேரடியாக பதிவு செய்தனர். இதை பின்னர் படத்தில் சேர்த்தனர்.

பெண்கள் கடும் எதிர்ப்பு
ஆனால் இந்த செயலுக்கு கேரளாவில் பல்வேறு பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது பெண்களை இழிவுபடுத்தும் செயல். தாய்மையை குறைத்துக் காட்டும் செயல். எனவே இதை படத்தில் சேர்க்கக் கூடாது. நீக்க வேண்டும், இல்லாவிட்டால் போராடுவோம் என கொந்தளித்தனர்.

சென்சாருக்கு ஓ.கே.வாம்...
இதையடுத்து படம் சென்சார் போர்டுக்குப் போனது. சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தைப் பார்த்தனர். பிரசவக் காட்சிக்கு அவர்கள் ஆட்சேபனை சொல்லவில்லை. மாறாக யுஏ சான்றிதழ் கொடுத்து விட்டனர்.

ஆக. 23ம் தேதி ரிலீஸ்
இதையடுத்து தற்போது படம் வெளியாவதில் சிக்கல் நீங்கியுள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி படம் திரைக்கு வருகிறதாம்.

போராட்டம் வெடிக்குமா...?
ஆனால் பெண்கள் அமைப்புகள் போராட்ட அறிவிப்புகளை ஏற்கனவே அறிவித்துள்ளதால் படம் வெளியாகும் போது சர்ச்சை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











