இந்தியன் 2.. 5 விஷயத்தை உடனே மாத்துங்க.. சென்சார் போர்டு போட்ட கண்டிஷன்!
சென்னை : சென்னை: கமலின் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான இந்தியன் 2, வரும் 12ந் தேதி வெளியாக உள்ள நிலையில், ஊழல் சந்தை என்ற லேபிளை அகற்ற வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கடுமையான வார்த்தைகளை மாற்றப்பட்டுள்ளன என படத்தில் 5 முக்கிய மாற்றம் செய்ய வேண்டும் என தணிக்கை குழு படக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம், ஊழல்வாதிகளை தண்டிக்க வன்முறையில் ஈடுபடும் ஊழலுக்கு எதிரான போராட்ட வீரர் சேனாபதியாக கமல்ஹாசன் மீண்டும் வருகிறார். இப்படத்தில் கமல், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியன் 2-ஐ விட இந்தியன் 3 தான் பிடிக்கும் என்றும், மூன்றாம் பாகம் பிடித்ததால் தான் இரண்டாம் பாகத்தை செய்தேன் என்றும் படத்தின் ப்ரோமோஷனில் கமல்ஹாசன் கூறியிருந்தார்.

இந்தியன் 2: இந்தியன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்த நிலையில், இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3க்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில், கடந்த வாரம் காலண்டர் பாடல் வெளியானது. காட்சிகளும் மிக பிரமாண்டமாக அமைந்துள்ளன இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். சுவி மற்றும் ஐஸ்வர்யா சுரேஷ் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார்கள். 2017ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற தென் அமெரிக்க மாடல் டெமி லீ டெபோ நடித்துள்ளார். இந்த பாடல் தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங்காக உள்ளது.
சென்சார் போர்டு கெடுபிடி: இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில், படத்தில் இருந்து 5 முக்கிய விஷயத்தை மாற்ற வேண்டும் என தணிக்கை குழு படக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. அதாவது, புகைப்பிடித்தல் தொடர்பான எச்சரிக்கை வாசகங்களை கருப்பு நிறத்தில் மிகவும் பெரியதாக வெள்ளை நிற பின்னணியில் வைக்க வேண்டும், காட்சியில் வரும் ஊழல் சந்தை என்ற லேபிளை அகற்ற வேண்டும், குறைந்த ஆடைகள் கொண்ட அல்லது ஆடையில்லாது நடிகர்கள் வரும் காட்சிகளை மாற்றம் செய்ய வேண்டும், 'டர்ட்டி இந்தியன்' [Dirty indian], 'F**k' உள்ளிட்ட வசனங்களை நீக்க வேண்டும், மேலும், படத்தில் வரும் காப்புரிமை பெற்ற விஷயங்களுக்கு NOC தடையின்மை சான்றிதழ் வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ரன்னிங் டைம்: இதையடுத்து, சென்சார் போர்டின் உத்தரவுப்படி தயாரிப்பாளர்களால் மாற்றங்கள் செய்யப்பட்டதை அடுத்து இந்தியன் 2 திரைப்படத்தை அனைத்து வயதினரும் பார்க்கக்கூடிய வகையில் யு.ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் 2 ரன்னிங் டைம், 180 நிமிடங்கள் நேரம் ஓடக்கூடியதாக இருக்கும், அதாவது படத்தின் இடைவேளையைச் சேர்த்து சுமார் 3.5 மணிநேரம் இந்தியன் 2 படம் இருக்கும்.


Click it and Unblock the Notifications











