லென்ஸ் வைத்து படம் பார்க்கும் சென்சார் போர்டு!

மெர்சல் பட பஞ்சாயத்துகளுக்கு பிறகு தமிழ்ப் படங்களை பார்க்கும்போது மத்திய அரசுக்கு எதிராக காட்சியோ வசனமோ வந்துவிடப் போகிறது என்று பூதக் கண்ணாடி வைத்து கண்காணிக்கிறதாம் சென்சார் போர்டு.

இரண்டு வரி வசனங்கள் மூலம் ஒரு சுமாரான படத்தை சூப்பர் ஹிட் படமாக்கி விட்டது மெர்சல் படக்குழு. மத்திய அரசை எப்படி விமர்சிக்கலாம் என்று பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்ப அது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.

Censor board deeply monitors new movies

மெர்சல் ஃபார்முலாவைப் பார்த்த தமிழ் சினிமா ஆட்கள் தயாராகும் படங்களிலும் வலுக்கட்டாயமாக அரசை விமர்சிக்கும் விஷயங்களை நுழைக்கிறார்களாம். இப்போதுகூட விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை படத்தில் ஜிஎஸ்டி பற்றி ஒரு பாடல் இடம்பெற்று பின் அதை இஎம்ஐ பாடலாக மாற்றியிருக்கிறார்கள்.

சென்சார் போர்டு மீது மெர்சல் விஷயத்திலேயே மத்திய அரசுக்கு அதிருப்தி நிலவுவதால் இப்போது பார்வைக்கு வரும் படங்கள் எல்லாம் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றனவாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X