twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமூக விரோத கருத்துகள்.. ஏத்துக்க முடியாது.. பிரபல ஹீரோயின் படத்துக்கு சென்சார் அனுமதி மறுப்பு!

    By
    |

    கொச்சி: பிரபல நடிகை நடித்துள்ள படத்துக்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்துவிட்டது.

    தமிழில், பூ படம் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. இதையடுத்து இங்கு பூ பார்வதி என்றே அறியப்படுகிறார்.

    அவர ஆடியன்ஸுக்கு பிடிக்குதா பிடிக்கலையா? ஷிவானியுடன் தீவிர டிஸ்கஷன்.. மண்டைக்காயும் ரம்யா! அவர ஆடியன்ஸுக்கு பிடிக்குதா பிடிக்கலையா? ஷிவானியுடன் தீவிர டிஸ்கஷன்.. மண்டைக்காயும் ரம்யா!

    இந்தப் படத்தை அடுத்து அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. பல படங்களில் நடித்தார்.

    உத்தமவில்லன்

    உத்தமவில்லன்

    தனுஷூடன் மரியான், கமலுடன் உத்தமவில்லன், ஆர்யா, ராணா நடித்த பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் பார்வதி. இந்தியில், கரிப் கரிப் சிங்கிள் என்ற படத்தில் இர்பான் கானுடன் நடித்திருந்தார்.

    திராவக பாதிப்பு

    திராவக பாதிப்பு

    ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வரும் அவர், உயரே என்ற படத்தில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்டப் பெண்ணாக நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன் இவர் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் இருந்து திடீரென விலகினார். இது கேரளாவில் பரபரப்பானது.

    ஃபஸியா சுபியா

    ஃபஸியா சுபியா

    இந்நிலையில், அவர் இப்போது நடித்துள்ள படம் வர்த்தமனம் (Varthamanam). சித்தார்த் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் ரோஷன் மாத்யூ, சித்திக், சஞ்சு உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் கேரளாவில் இருந்து டெல்லிக்கு மேற்படிப்புக்காகச் செல்லும் ஃபஸியா சுபியா என்ற மாணவியாக நடித்திருக்கிறார், பார்வதி.

    சென்சார் போர்ட்

    சென்சார் போர்ட்

    இந்தப் படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு சான்றிதழ் தர மறுத்துவிட்டது. சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக படம் இருப்பதாகவும் சமூக விரோத கருத்துகள் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளது. பாஜகவை சேர்ந்த சென்சார் போர்டு உறுப்பினர் சந்தீப் குமார் இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

    ரிவைசிங் கமிட்டி

    ரிவைசிங் கமிட்டி

    டெல்லியில் நடந்த மாணவர்கள் போராட்டம், முஸ்லீம்களின் பிரச்னைகள் பற்றி படத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. கேரள சென்சார் சான்றிதழ் தர மறுத்ததை அடுத்து, படக்குழு மும்பையில் ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்ப முடிவு செய்துள்ளது.

    English summary
    Malayalam film starring Parvathy and directed by Sidhartha Siva, has been denied permission from Kerala's regional censor board.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X