மொத்தம் 60 கட்கள்... சந்திரமுகி பாடல் பெயரிலான படத்துக்கு சென்சார் கொடுத்த ஷாக்

சென்னை: ரா ரா சரசுக்கு ரா ரா படத்துக்கு மொத்தம் 60 கட்டுகளை சென்சார் கொடுத்திருக்கிறது. இருந்தாலும் படம் மறு தணிக்கைக்கு சென்று தப்பித்திருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் மெகா ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே இன்றுவரை பலரது ஃபேவரைட். அந்தப் பாடல்களில் ஒன்றுதான் ரா ரா சரசுக்கு ரா ரா. தற்போது அந்த வரியை தலைப்பாக வைத்தே படம் ஒன்று உருவாகியிருக்கிறது. ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.

 Censor Board Gave 60 Cuts To Ra Ra Saraukku Ra Ra Movie

நடன கலைஞர் டூ இயக்குநர்: இப்படத்தை நடன இயக்குநர் கேஷன் தெபுர் இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட 350 படங்களுக்கும் மேல் நடன இயக்குநாக அவர் பணியாற்றியிருக்கிறார். மேலும் . நடன இயக்குநர்கள் பிரபுதேவா,RRR படத்தில் ஆஸ்கார் விருதை வென்ற 'நாட்டு நாட்டு ' பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித், ராகவா லாரன்ஸ் போன்றவர்களிடம் உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற கலைஞர்கள்: இப்படத்தில் கார்த்திக், காயத்ரி பட்டேல் , KPY பாலா , மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா ,அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி ,ஜெஃபி, ஜெயவாணி, அக்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். ஜிகேவி இசையமைக்க ஆர்.ரமேஷ் இசையமைத்திருக்கிறார். லேடீஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்த சில வாலிபர்கள் ஒரு க்ரைமுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் .அதிலிருந்து அவர்கள் வெளிவந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் ஒன்லைன்.

 Censor Board Gave 60 Cuts To Ra Ra Saraukku Ra Ra Movie

தயாரிப்பாளர் பேட்டி: இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் ஜெயலட்சுமி பேசுகையில், " இப்படத்தின் கதை ஒரே இரவில் நடக்கிறது. பெல்லாரி ராஜாவும் தாமோதரனும் அரசியலில் ஒன்றாக இருந்து பகைவர்களாக மாறியவர்கள்.பெல்லாரி ராஜா அந்த தாமுவைக் கொன்று விடுகிறான்.அதை நேரில் பார்த்த பெண் வீடியோ எடுத்து விடுகிறாள் . பெல்லாரியின் கும்பல் அவளை துரத்துகிறது. அவள் எஸ்.ஆர்.லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஓடிப் போகிறாள்.

 Censor Board Gave 60 Cuts To Ra Ra Saraukku Ra Ra Movie

லேடிஸ் ஹாஸ்டலுக்குள் இளைஞர்கள் இரண்டு பேர் நுழைந்து விடுகிறார்கள். அங்குள்ள இரு பெண்களால் ஒரு கால் பாய் அழைக்கப்படுகிறான்.ஆள் மாறாட்டக் குழப்பத்தில் ஒரு கொலை நடக்கிறது. இப்படி அடுத்தடுத்த கொலைகள் ,பரபரப்பு விறுவிறுப்பு கொண்ட பின்னணியில் இக்கதை உருவாகியுள்ளது" என்றார்.

60 கட்டுகள்: இந்நிலையில் இப்படத்தில் 18 ப்ளஸ் காட்சிகளும் வசனங்களும் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தை பார்த்த சென்னை மண்டல சென்சார் அதிகாரி மொத்தம் 60 கட்டுகளை கொடுத்திருந்தார். ஆனால் அதையும் மீறி மும்பை சென்று மறு தணிக்கை செய்து வந்துள்ளார்கள். இந்தப் படமானது நவம்பர் மூன்றாம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X