யப்பா விடுதலை படத்தில் எவ்வளவு கெட்ட வார்த்தைகள்.. ஸ்ட்ரிக்ட்டாக கட் செய்த சென்சார்

சென்னை: விடுதலை படத்தில் மொத்தம் 12 கெட்ட வார்த்தைகளுக்கு சென்சார் போர்டு கட் செய்து படத்துக்க் ஏ சர்ட்டிஃபிக்கேட் கொடுத்துள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறன் கடைசியாக அசுரன் படத்தை இயக்கினார். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக அவர் விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை

ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. இதன் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனின் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

ரசிகர்களை பிரமிக்க வைத்த விடுதலை ட்ரெய்லர்

ரசிகர்களை பிரமிக்க வைத்த விடுதலை ட்ரெய்லர்

விடுதலை படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அந்த விழாவில் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, இளையராஜா, ஜெயமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். விடுதலை படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் வசனங்களும், காட்சிகளும் அசுரன் படம் போலவே நிச்சயம் இந்தப் படம் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பும் என்பதை உணர்த்துகிறது.

வெற்றிமாறன் படத்தில் இருக்கும் கெட்ட வார்த்தைகள்

வெற்றிமாறன் படத்தில் இருக்கும் கெட்ட வார்த்தைகள்

வெற்றிமாறன் தனது படங்களை உண்மைக்கு அருகில் சென்று வெகு யதார்த்தமாக படமாக்குபவர். இதனால் மனிதர்கள் நிஜத்தில் எப்படி உரையாடிக்கொள்வார்களோ அதேபோன்ற உரையாடல்களும் படத்திலும் இடம்பெறும். எனவே, ஏராளமான கெட்ட வார்த்தைகள் படத்தில் இடம்பெறுவது வழக்கம். இவர் இயக்கிய வடசென்னை படத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் இருக்கும். அதேசமயம் அவை வேண்டுமென்றே வைக்கப்படாமல் கதையின் தேவைக்கேற்ப இடம்பெற்றிருக்கும்.

விடுதலைக்கு சென்சார் போட்ட கடிவாளம்

விடுதலைக்கு சென்சார் போட்ட கடிவாளம்

இந்நிலையில் விடுதலை படம் சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் குழு மொத்தம் 12 வசனங்களுக்கு கட் கொடுத்துள்ளது. அவை அனைத்துமே கெட்ட வார்த்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்துக்கு ஏ சர்ட்டிஃபிக்கேட்டை கொடுத்திருக்கிறது சென்சார். எனவே விடுதலை படமும் வடசென்னை போன்றே ரொம்பவும் ராவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

நேற்று வெளியான விடுதலை மேக்கிங் வீடியோ

நேற்று வெளியான விடுதலை மேக்கிங் வீடியோ

முன்னதாக, விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியானது. அதில் சூரி செய்யும் ஆக்‌ஷன் காட்சிகளும், பிற நடிகர்களுக்கு வெற்றிமாறன் நடிப்பு சொல்லிக்கொடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. ஆக்‌ஷன் காட்சிகளுக்காக சூரி அதிகமாகவே ரிஸ்க் எடுத்திருப்பது மேக்கிங் வீடியோவை பார்க்கும்போது தெரிகிறது. எனவே இந்தப் படம் சூரிக்கு பெரும் அடையாளமாக இருக்கப்போவது உறுதி என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X