கூலி படத்திற்கு ‘ஏ‘ சான்றிதழ்..36 வருடத்திற்கு பின் ரஜினி படத்தில் இப்படியா? அப்படி என்ன இருக்கு?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள 'கூலி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகி உள்ளது. இதில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபபேந்திரா, அமீர்கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். சுமார் 350 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. 'ஏ' சான்றிதழ் கொடுக்கும் அளவிற்கு இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.

'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன் பிறகு 'கைதி' படத்தை இயக்கினார். அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த படத்தின் மூலம் லோகேஷின் பெயர் இந்திய திரையுலகில் பிரபலமானது. அதைத்தொடர்ந்து 'மாஸ்டர்', 'விக்ரம்' 'லியோ' திரைப்படங்களின் மூலம் வெற்றியை ருசித்தார். தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த கமல்ஹாசனுக்கு விக்ரம் படம் மூலம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ் தான்.

Coolie Lokesh kanagaraj Rajini
Photo Credit:

கூலி திரைப்படம்: லோகேஷ் கனகராஜ்: தற்போது லோகேஷ் கூலி திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம், ஆகஸ்ட் 14ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. படத்தின் ப்ரோமோஷன் வேலையில் சுறுசுறுப்பாக இருக்கும் லோகேஷ் கனராஜ், யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கூல் படத்திற்காக 50 கோடி சம்பளம் வாங்கியதாக கூறினார். மேலும், இதற்கு முன்பு நான் இயக்கிய 'லியோ' படம் 600 கோடியை வசூல் செய்தது. இதனால் என்னுடைய சம்பளம் இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டது. இது என் உழைப்பிற்கு கிடைத்த பரிசு என்றார். இப்படத்திற்காக ரஜினிகாந்திற்கு ரூ.150 கோடியும், நாகார்ஜுனாவிற்கு ரூ.20 கோடியும், அமீர்கானுக்கு ரூ.25 கோடியை தயாரிப்பு நிறுவனம் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

36 ஆண்டுக்குபின்: இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளது. குழந்தைகளுக்குப் பொருந்தாத கடுமையான வன்முறை காட்சிகள், அதிக சண்டை காட்சிகள் படத்தில் இருப்பதால் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஏ சான்றிதழ் என்பது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்ப்பதற்கு தகுதியுள்ள படங்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் ஆகும். இதற்கு முன், ரஜினிகாந்த் நடித்து 1982ம் ஆண்டு வெளியான புதுக்கவிதை, ரங்கா, நான் சிகப்பு மனிதன் , ஊர்க்காவலன் போன்ற திரைப்படங்களுக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. 1987ஆம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு பின் கூலி படத்திற்கு தான் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தை குடும்பத்தோடு குழந்தைகளை அழைத்து சென்று பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.இதனிடையே, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 7 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X