Leo Censor Certificate - லியோ சென்சார் சர்ட்டிஃபிகேட் இதுதான்..அதெல்லாம் கன்ஃபார்ம்தான் போல..புதிய தகவல் இதோ
சென்னை: Leo Censor Certificate (லியோ சென்சார் சர்ட்டிஃபிகேட்) லியோ படத்துக்கு சென்சார் சர்ட்டிஃபிகேட் கிடைத்திருப்பதை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
விஜய் நடித்திருக்கும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கும் இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

என்ன கதை?: லியோ படத்தின் கதை இதுதான் என்று பல்வேறு யூகங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது சஞ்சய் தத், அர்ஜுன், விஜய் ஆகிய மூன்று பேரும் ஒரே கேங்ஸ்டர் குடும்பத்தை சேர்ந்தவர்கள்; அதனை சுற்றி நடக்கும் பிரச்னைதான் கதை என்று ஒரு விஷயமும்; பாட்ஷா பாணியில் பெரிய கேங்ஸ்டரான விஜய் தனது அடையாளத்தை மறைத்து காஷ்மீரில் வாழ்வார் அவரை எதிரிகள் அழிக்க வரும்போது நடப்பதுதான் கதை என்று ஒரு விஷயமும் கூறப்படுகிறது. இருந்தாலும் ட்ரெய்லரை பார்த்தால்தான் ஓரளவுக்கேனும் கதை என்னவென்று தெரியவரும்.
லியோ அப்டேட்ஸ்: லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 30ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகினர். இருந்தாலும் படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும் என்று கூறப்பட்டது. அதன்படி படத்தின் இரண்டாவது சிங்கிள் சமீபத்தில் வெளியாகி டீசண்ட்டான வரவேற்பை பெற்றது.
நாளை ட்ரெய்லர்: இந்த சூழலில் லியோ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பு போஸ்டரில் பனி பிரதேசத்தில் ஹைனா விலங்குடன் விஜய் மோதுவது போன்று இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் படத்தில் கண்டிப்பாக ஏகப்பட்ட சர்ப்ரைஸ்கள் இருக்குமோ என்று ஆவலோடு காத்திருக்கின்றனர். இதற்கிடையே விஎஃப் எக்ஸில் ஒரு சிங்கத்தை உருவாக்கி வைத்திருப்பதாகவும் அது படத்தின் ஒரு காட்சியில் விஜய்க்கு உறுதுணையாக சண்டையிடும் என்றும் கூறப்படுகிறது.
ரத்தம் தெறிக்க தெறிக்க: லோகேஷ் கனகராஜின் படம் என்றாலே அதில் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு கேங்ஸ்டர் படத்தை கொடுப்பார். அப்படித்தான் விக்ரம் படத்தையும் கொடுத்திருந்தார். இந்நிலையில் லியோவும் ரத்தம் தெறிக்க தெறிக்க இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சென்சார் போர்டு லியோ படத்துக்கு யூ/ஏ சர்ட்டிஃபிகேட்டை கொடுத்திருக்கிறது. இதனை லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











