'யு' அல்லது 'யுஏ'...நடுவில் நிற்கும் நான்கு உதடுகள்...!
சென்னை: லட்சுமி மேனனுக்கும், விஷாலுக்கும் இடையிலான ஆழமான முத்தம் ஒரு சர்ட்டிபிகேட் பெறுவதற்கு பெரும் இடையூறாக மாறியுள்ளதாம்.
நான் சிகப்பு மனிதன் பட விவகாரம் இது.. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள இந்த முத்தக் காட்சியால் படத்திற்கான யு சான்றிதழைத் தர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாம் சென்சார் போர்டு.
முத்தக் காட்சியை எடுத்தால் யு தருகிறோம் என்று கூறிய சென்சார் அதிகாரிகள் தற்போது படத்திற்கு யுஏ கொடுத்து அனுப்பி வைத்துள்ளனராம்.

கெமிஸ்ட்ரியில் டிஸ்டிங்ஷன்
விஷாலும், லட்சுமி மேனனும் இப்போது கெமிஸ்ட்ரியில் டிஸ்டிங்ஷனுடன் பாஸ் ஆகி விட்டனர். இதனால் இவர்கள் ஜோடி சேர்ந்து நடிக்கும் படங்களுக்கும் நல்ல கிராக்கி கிளம்பியுள்ளது.

கவர்ச்சியே காட்டாத லட்சுமியை
இதுவரை கவர்ச்சி காட்டி நடித்ததில்லை லட்சுமி மேனன். ஆனால் விஷாலும், அவரும் இணைந்து நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் படத்தில் தூக்கலாக கவர்ச்சியை கொடுத்துள்ளாராம் லட்சுமி மேனன்.

செம முத்தம்
இப்படத்தில் விஷாலும், லட்சுமி மேனனும் இணைந்து பங்கேற்றுள்ள லிப் லாக் குறித்துத்தான் இப்போது கோலிவுட் உதடுகள் சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கின்றன.

அழுத்தமான முத்தம்
சாதாரணமாக கொடுத்துக் கொள்ளாமல், அழுத்தமாக, ஆழ்ந்து அனுபவித்துக் கொடுத்துள்ளனராம் இருவரும்.

இப்படி ஒட்டிக் கிடந்தா எப்படி
படத்தை முடித்து சென்சாருக்கும் அனுப்பி வைத்தனர். படத்தை நிதானமாக பார்த்த அதிகாரிகள், அதில் இடம் பெற்ற முத்தக் காட்சியில்தான் சற்று குழம்பிப் போய் விட்டார்கள். இப்படி அழுத்தமாக முத்தம் கொடுத்திருக்கும் காட்சியை வைத்துக் கொண்டு யு சான்றிதழ் தர முடியாது என்று கூறி விட்டனராம்.

எடுத்தால் தருகிறோம்
முத்தக் காட்சியை நீக்குங்கள். அப்படிச் செய்தால் யு சான்றிதழ் தருகிறோம். அது நீடித்தால் யுஏதான் என்று கூறி விட்டனராம்.

ஆனால் அதுதான் பலமாச்சே
ஆனால் இந்த முத்தக் காட்சியை வைத்துத்தான் படத்தை விற்று ஓட வைக்க முடியும் என்று படக் குழு நம்புவதால் எடுக்க மனம் இல்லாமல் உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











