twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    7 சென்சார் போர்டு அதிகாரிகள் அதிரடி மாற்றம்... சென்னைக்கும் புதிய அதிகாரி!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : சினிமா சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சமீபகாலமாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. பன்சாலியின் பத்மாவதி முதல் விஜய் நடித்த மெர்சல் வரை இந்த பிரச்னை நடந்தது. சென்சார் போர்டு அலுவலகம் முன்பு போராட்டங்களும் நடந்தது.

    சென்சார் போர்டு அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவதாகவும், பணம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் 7 தணிக்கை அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    censor board officials changed all over india

    சென்னை, தணிக்கை அதிகாரியாக இருந்துவந்த மதியழகன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக லீலா மீனாட்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டெல்லி தூர்தர்ஷனில் பப்ளிக் டிவிஷனல் அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர். இதேபோல சாம்ராட் பண்டோபாத்யாயா கொல்கத்தா அதிகாரியாகவும், குருபிரசாத் பெங்களூர் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கர்மார்கர் துஷ்சார் மும்பை அதிகாரியாகவும், வி.பார்வதி திருவனந்தபுரம் அதிகாரியாகவும், சுபஸ்ரீ மஹாபத்ரா சட்டாக் அதிகாரியாகவும், ரகுல் கோவில்கர் ஐதராபாத் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் இத்தனை அதிகாரிகள் மாற்றப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

    சென்சார் போர்டு அதிகாரிகளின் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கான எதிர்வினையாகவே இந்த முடிவை எடுத்திருக்கிறது தணிக்கை வாரியம். படங்களில் காட்சிகளை கட் செய்தாலும் பிரச்னை, நீக்காமல் விட்டாலும் பிரச்னை. சிக்கல்களைத் தீர்த்து பிரச்னைகள் இல்லாமல் படங்கள் வெளிவருமா எனப் பார்க்கலாம்.

    English summary
    Recently, the censor board officials have been accused of continuing allegations. This problem took place between Padmavati and mersal. The protests took place before the censor Board office. In this situation, seven censor officials have been changed across India. Mrs. Leela meenakshi appointed for chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X