'வடக்கன்’ படத்துக்கு கடைசி நேரத்தில் இப்படியொரு சிக்கலா?.. முதலுக்கே மோசமாகிடுச்சே பாஸ்!

சென்னை: மற்ற மொழி சினிமாவில் தமிழர்கள் குறித்தும் தமிழ் சினிமா குறித்தும் பல சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம் பெற்று வந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவிலும் அதுபோன்ற பாணியை கையாள்கிறார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மாடர்ன் லவ் சென்னை எனும் அந்தாலஜியில் இடம்பெற்ற 'லாலாகுண்டா பொம்மைகள்' கதையில் வட இந்தியரான பானிப்பூரி வியாபாரி தமிழ்நாட்டு ஹீரோயினை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு எஸ்கேப் ஆக்கி விடுவது போல காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

Censor Board opposes Vadakkan movie title during censor

பரிதாபங்கள் கோபி சுதாகர் வெளியிட்ட வடக்கு ரயில் பரிதாபங்கள் நிகழ்ச்சி குறித்தும் கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. இந்நிலையில், 'வடக்கன்' படத்தின் டைட்டிலுக்கே தற்போது எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

மாவீரன் படத்தில்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த மாவீரன் படத்தில் யோகி பாபுவின் காமெடி காட்சிகளே வட இந்தியர்களை டார்கெட் செய்வது போலவே அமைந்திருக்கும். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும் தமிழ்நாட்டை சேர்ந்த யோகி பாபு வட இந்தியர் போல ஆள்மாறாட்டம் செய்து வேலையில் சேர்வது போன்ற காட்சிகள் காமெடியாக வைக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வட இந்தியர்களால் இங்கே ஏற்படும் பிரச்சனைகள் குறித்த கதைகள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், 'வடக்கன்' என்கிற தலைப்பிலேயே ஒரு படத்தை உருவாக்கி உள்ளனர்.

Censor Board opposes Vadakkan movie title during censor

வடக்கன்: பிரபல எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள படத்திற்கு 'வடக்கன்' என தலைப்பு வைத்துள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இந்த மாதம் 24-ஆம் தேதி அந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. குங்கும ராஜ் மற்றும் வைரமாலா இந்த படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளனர். மேலும், ரமேஷ் வைத்தியா, பர்வேஷ் மெஹ்ரூ, சமீரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டைட்டிலுக்கு தடை: அடுத்த வாரம் இந்த படம் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் தணிக்கைக்காக படம் அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்தின் டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'வடக்கன்' என்கிற டைட்டிலை அனுமதிக்க முடியாது எனக்கூறிய நிலையில், படத்தின் டைட்டில் தான் ரொம்ப முக்கியம் என நினைத்த படக்குழுவினர் ரிவைசிங் கமிட்டியை நாட முடிவு செய்துள்ளனர். இதனால் திட்டமிட்டபடி அடுத்த வாரம் படம் வெளியாகுமா என்பது சந்தேகம் தான் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X