Leo Censor: என்ன சொல்றீங்க லியோவுக்கு ஏ சர்டிபிகேட்டா?.. சென்சார் தரப்பும் வைத்த செக்மேட்?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்ஷன் கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ள நிலையில், படத்துக்கு ஏ சான்றிதழ் தான் கிடைக்கும் என திரையுலகில் திடீரென பெரும் பரபரப்பு கிளம்பி உள்ளது.
விஜய்க்கு வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர், கெளதம் மேனன் என ஒரு பெரிய லிஸ்ட்டே சொல்லப்படுகிறது.

மேலும், விக்ரம் படத்தை விட இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் வெறித்தனமாக இருக்கும் என்றும் அதிகமான பிளடி ஸ்வீட் காட்சிகள் இருப்பதால் அதிகபட்சம் ஏ சான்றிதழ் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக வெளியாகி உள்ள தகவல்கள் தற்போது லியோ படக்குழுவினரை அப்செட்டில் ஆழ்த்தி உள்ளது.
லியோவுக்கு எதிராக பெரும் போட்டி: ரஜினிகாந்தின் ஜெயிலர் போல எல்லாம் சோலோவாக ரிலீஸ் ஆகி லியோ ஈஸியா பாக்ஸ் ஆபிஸ் அடிக்க முடியாது என்றும் தமிழ்நாட்டு வசூலை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டதாக கூறுகின்றனர். கன்னடத்தில் மட்டும் சிவராஜ்குமாரின் கோஸ்ட் படத்தை சேர்த்து 3 பெரிய நடிகர்களின் படங்கள் போட்டிக்கு வருகின்றன.
தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி மற்றும் ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வரராவ் படங்களும் மலையாளத்தில் திலீப் நடித்துள்ள பிக்பாக்கெட் திரைப்படம் அக்டோபர் 17ம் தேதியே வெளியாகிறது. பாலிவுட்டிலும் சில படங்கள் தசரா விடுமுறையை டார்கெட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செக் வைத்த சென்சார்: இந்நிலையில், லியோ படத்தின் காட்சிகள் அதிக வன்முறையை கொண்டிருப்பதாகக் கூறி சென்சார் பல இடங்களில் கத்தரி போட வேண்டும் என சொல்லியிருப்பதாகவும், காட்சிகளை கத்தரிக்கவில்லை என்றால் ஏ சான்றிதழ் தான் வழங்கப்படும் என சொல்லியிருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
நடிகர் விஜய் படங்களுக்கு அதிகளவில் ஃபேமிலி ரசிகர்கள் வந்தால் தான் படத்திற்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கிடைக்கும் என்பதால் யு/ஏ சான்றிதழை டார்கெட் செய்து வருகிறது லியோ படக்குழு. ஆனால், அதற்கு சில முக்கியமான காட்சிகளை சென்சார் செய்ய வேண்டும் என்றும் சில வசனங்களை மியூட் செய்ய வேண்டும் என்கிற நிலை உருவாகி உள்ளதாக கூறுகின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ராவான படத்தைக் கொடுப்பாரா அல்லது பாக்ஸ் ஆபிஸ் வசூலை குறிவைத்து சில காட்சிகளை கத்தரிக்க அனுமதிப்பாரா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











