'ஆட்ட முடியாது, முண்ட, ராகுல்'... 'பேட்ட' படத்தில் இருந்து வெட்டப்பட்ட அந்த ஆறு காட்சிகள்!
பேட்ட படத்துக்கு ஆறு இடங்களில் கத்திரி போட்டிருக்கிறது சென்சார் போர்டு.
சென்னை : பேட்ட படத்துக்கு ஆறு இடங்களில் கத்திரி போட்டிருக்கிறது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்.
ரஜினியின் பேட்ட திரைப்படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகின்றன. இரண்டு படங்களுமே தியேட்டரை பிடிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

அந்தந்த பட தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுடைய படத்தின் புரோமோஷனை தீவிரமாக செய்து வருகின்றன. இரண்டு படங்களும் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டன. இதில் விஸ்வாசம் படத்துக்கு எந்த வெட்டும் இல்லாமல், யு சான்று வழங்கப்பட்டுள்ளது.
பேட்ட படத்துக்கு ஆறு வெட்டுகளுடன் யு/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது. அது என்ன வெட்டுகள் என்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆட்ட முடியாது', 'சூத்தானது', 'முண்ட', 'கூ', 'ராகுல்' ஆகிய வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், துப்பாக்கிச் சூடு காட்சியும், ரத்தக்கறை காட்சியும் குறைக்கப்பட்டுள்ளன.
இவை தான் பேட்ட படத்தில் இருந்து வெட்டப்பட்ட காட்சிகளாகும்.


Click it and Unblock the Notifications











