»   »  என்னய்யா இது செக்ஸ் படத்தைவிட மோசமா இருக்கே... - சன்னி லியோன் படம் பார்த்து அதிர்ந்த சென்சார்

என்னய்யா இது செக்ஸ் படத்தைவிட மோசமா இருக்கே... - சன்னி லியோன் படம் பார்த்து அதிர்ந்த சென்சார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னாள் ஆபாசப் பட நாயகியான சன்னி லியோன் நடித்துள்ள புதிய இந்திப் படக் காட்சிகள் ஆபாசத்தின் உச்சமாக இருப்பதாகவும், படத்துக்கு ஏ சான்று கூட தர முடியாது என்றும் சென்சார் குழு தெரிவித்துள்ளது.

ஜிஸ்ம் 2 படம் மூலம் இந்தியில் அறிமுகமான ஆபாசப் பட நடிகை சன்னி லியோன், இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

Censor refuse to give even A certificate to Leela

சன்னி லியோன் இந்தியில் நடித்த எல்லாப் படங்களுக்குமே ஏ சான்றுதான் வழங்கப்பட்டது. தற்போது ஏக் பெஹலி லீலா என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். படம் முழுக்க அவர் பாத்திரம் வருகிறது.

Censor refuse to give even A certificate to Leela

ஒரு பாடல் காட்சியை 100 லிட்டர் பாலில் சன்னி லியோன் குளிப்பது போன்று எடுத்துள்ளனர். நிஜமாக 100 லிட்டர் பால் வாங்கி அவர் மீது ஊற்றி குளிக்க வைத்துள்ளனர். இந்தக் காட்சி படு ஆபாசமாக உள்ளதாக தணிக்கை குழுவினர் கூறியுள்ளனர்.

Censor refuse to give even A certificate to Leela

பொதுவாக ஆபாச காட்சிகள் உள்ள படங்களுக்கு தணிக்கை குழுவினர் ‘ஏ' சான்றிதழ் அளிப்பது வழக்கம்.

ஆனால் சன்னிலி யோன் படம் ‘ஏ' படங்களை விட மோசமாக உள்ளதாகக் கூறியுள்ளனர் குழுவினர். அந்த அளவு ஆபாசத்தின் உச்சமாக உள்ளதாம் காட்சிகள்.

Censor refuse to give even A certificate to Leela

கிட்டத்தட்ட பாதிப் படத்தை வெட்டியெறிந்தால்தான் தணிக்கைச் சான்று தர முடியும் என தணிக்கைக் குழுவினர் சொல்ல, ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப் போகிறார்களாம் படத்தை.

English summary
Censor officials denied even A certificate to Sunny Leone starrer Ek Pehali Leela.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil