Youth Censor: யூத் படத்திற்கு சென்சார் கிடைக்கவில்லை? விஜய் படத்தோட பெயரை வைத்தது குத்தமா?
சென்னை: நடிகர் கருணாஸ் - பாடகி கிரேஸ் கருணாஸ் தம்பதியரின் மகன் நடிகர் கென் கருணாஸ். இவர் எழுதி இயக்கி நடித்துள்ள படம் யூத். படம் நாளை வெளிகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். காரணம் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தை வெளியிட மொத்த படக்குழுவும் தீயாக வேலை செய்து கொண்டு இருந்தாலும் படத்திற்கு சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை என்ற பேச்சு தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அசுரன் படத்தின் தனுஷின் மகனாக நடித்து ஒரு தொழில்முறை நடிகராக தனது கெரியரை தொடங்கியவர் கென். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை குவித்தது. இவர் கதை எழுதி, இயக்கி நடித்துள்ள படம் யூத். இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். அதேபோல் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்காக இசையமைக்க ஜிவி பிரகாஷ் குமார் பணம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை என்று கருணாஸ் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் போது தெரிவித்தார். படத்தின் முதல் கட்ட அறிவிப்பு, முதல் பாடல் ரிலீஸ், படத்தின் புரோமோசன்கள் என தொடர்ந்து யூத் படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருந்து வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார்.
சென்சார் பிரச்னை: இப்படி இருக்கும்போது, படம் நாளை வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். பிஸ்மி இவ்வாறு கூறியுள்ள தகவல் ரசிகர்கள் தொடங்கி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே சென்சார் பிரச்னையால் நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படம் படக்குழு அறிவித்த தேதியில் ரிலீஸ் ஆக முடியாமல் இதுவரை சென்சார் சான்றிதழ் பெறாமல் உள்ளது.

நக்கல் போஸ்ட்: இப்படி இருக்கும் யூத் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று பிஸ்மி தெரிவித்துள்ள தகவல் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் சிலர், விஜய் படத்துக்குத்தான் சென்சார் கிடைக்காதுனு நினைத்தேன், விஜய்யின் பழைய படத்தின் பெயரை வைத்துக் கொண்டு வந்தாலுமே கூட சென்சார் கிடைக்காது போலயே என்று நக்கலாக போஸ்ட் போட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











