twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆபாச காட்சிகளுக்கு அளவே இல்லை.. மத பிரச்சனை கிளப்பும் வெப்சீரிஸ்கள். டிரெண்டாகும் #CensorWebSeries

    |

    சென்னை: டிவி சீரியல் எல்லாம் பார்க்கக் கூடாது என்று கிண்டல் செய்த இளைஞர்கள், வெப்சீரிஸில் மூழ்கிக் கிடக்க என்ன காரணம் தெரியுமா?

    வெப்சீரிஸ்களில் சென்சார் இல்லாமல் காட்டப்படும் நிர்வாணக் காட்சிகளும், ஆபாச காட்சிகளும் தான்.

    வெப்சீரிஸ் எடுத்து வெற்றி பெற வேண்டும் என்றால், ஒரு எபிசோடுக்கு ஒரு பிட்டு சீன் வைத்தால் போதும், இளைஞர்களின் ஃபேவரைட் தொடராக அது உலகளவில் கல்லாக்கட்டும்.

    முத்து குளிக்க வாரியளா..மூச்சை அடக்க வாரியளா ஆச்சி பிறந்த நாள்!முத்து குளிக்க வாரியளா..மூச்சை அடக்க வாரியளா ஆச்சி பிறந்த நாள்!

    கேம் ஆஃப் த்ரோன்ஸ்

    கேம் ஆஃப் த்ரோன்ஸ்

    HBOவில் ஒளிபரப்பான கேம் ஆஃப் த்ரோன்ஸ் உலகம் முழுவதும் டிரெண்டாக அதில் காட்டப்பட்ட அதிக அளவிலான நிர்வாணக் காட்சிகளும் முக்கியக் காரணம் என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தியாவில் ஒளிபரப்பாகும் HBOவில் அந்த தொடர் வெளியாகவில்லை. ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளத்தில் தான் ரசிகர்களுக்கு அந்த தாராள தொடர் கவர்ச்சி விருந்து அளித்தது.

    மஸ்த்ரம்

    மஸ்த்ரம்

    கெளதம் மேனன் இயக்கத்தில் எம்.எக்ஸ் பிளேயரில் வெளியான ‘குயின்' வெப்சீரிஸை காண்பதற்காக எம்.எக்ஸ் பிளேயருக்கு சென்ற ரசிகர்களுக்கு, அதில், குறைவின்றி கொட்டிக் கிடக்கும் மஸ்த்ரம், பாஞ்சாலி, பிளாக் காஃபி போன்ற ஆபாச வெப் தொடர்கள் பல ரசிகர்களை அதற்கு அடிமையாக மாற்றி வைத்திருக்கிறது.

    தணிக்கை இல்லை

    தணிக்கை இல்லை

    நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், எம்.எக்ஸ் பிளேயர், ஜீ5 என எந்தவொரு ஸ்ட்ரீமிங் தளத்திற்கும் தனியாக சென்சார் போர்டே இல்லை. இதனால், கட்டுக்கடங்காமல், ஆபாச வசனங்களையும், நிர்வாண காட்சிகளையும், இஷ்டத்துக்கு வைத்து காசு பார்த்து வருகின்றனர். அமேசான் பிரைமில் தமிழ் டப்பிங்கில் ஆங்கில படம் பார்த்தாலும், நிர்வாண காட்சிகள் அப்படியே இருப்பது மிகவும் கொடுமை.

    வெப்சீரிஸ்களுக்கு சென்சார் வேண்டும்

    வெப்சீரிஸ்களுக்கு சென்சார் வேண்டும்

    இந்நிலையில், தற்போது வெப்சீரிஸ்களுக்கு சென்சார் வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்து டிரெண்டாகி வருகிறது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை இது சீரழிப்பதாகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாய்ஸ் லாக்கர் ரூம் போன்றவை பெருகவும் இந்த வெப்சீரிஸ்கள் துணை நிற்பதாகவும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

    இந்துக்களுக்கு எதிராக

    இந்துக்களுக்கு எதிராக

    மேலும், இயக்குநர்கள் தாங்கள் நினைத்த கருத்துக்களை வெப்சீரிஸ்கள் மூலம் எந்தவொரு தடையும் இன்றி எடுக்க முடிவதால், இந்துக்களுக்கு எதிரான கருத்துக்கள், ஒரு மதத்தையோ அல்லது ஒரு இனத்தையோ தாராளமாக தாக்கும் விதமாகவும், கொச்சையான வசனங்களுடனும் வெளியாகின்றன. காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷியின் லெய்லா வெப் தொடருக்கு எதிராக வழக்கும் தற்போது தொடங்கப்பட்டு இருக்கிறது.

    அனுஷ்கா ஷர்மா வெப்சீரிஸ்

    அனுஷ்கா ஷர்மா வெப்சீரிஸ்

    பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில் சமீபத்தில் வெளியான பதால் லோக் வெப்சீரிஸில் அதிகப்படியான நிர்வாண காட்சிகள் மற்றும் உடலுறவு காட்சிகள் ஏகத்துக்கும் அரங்கேறி இருப்பதால், உடனடியாக அந்த வெப்சீரிஸை தடை செய்ய வேண்டும் என்றும், வெப்சீரிஸ்களுக்கு சென்சார் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும் நாடு முழுவதும் போர்க்கொடி எழுந்து இருக்கிறது.

    ஓரினச்சேர்க்கை

    ஓரினச்சேர்க்கை

    பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக், சைஃப் அலி கான், ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான Sacred Games வெப்சீரிஸிலும் இதே போல அதிகப்படியான ஆபாச காட்சிகளும், குரு, சிஷ்யன் இடையே ஓரினச்சேர்க்கை நடைபெறுவதாகவும், அந்த காட்சியில் நவாசுதின் சித்திக் நிர்வாணமாக நடித்திருப்பது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

    Recommended Video

    OTT யால் சினிமா THEATER அழியாது | PRODUCER THANU |பொன்மகள் வந்தாள் MOVIE ISSUE | Oneindia Tamil
    அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இந்த லாக்டவுன் நேரத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டு கிடப்பதால், வெப் தொடர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களின் கை ஓங்கி இருக்கிறது. தற்போது பலரும், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் உள்ளிட்டவற்றை சப்ஸ்கிரைப் செய்து பார்த்து வருகின்றனர். அதிக அளவு ஆபாசம், மத பிரச்சனையை தூண்டும் வகையில் காட்சிகள், கெட்ட வார்த்தைகள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கவனிக்க உடனடியாக தணிக்கை குழு ஒன்றை வெப் தொடர்களுக்கும் அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் அதிகப்படியான குரல்கள் ஒலிக்க தொடங்கி இருக்கின்றன

    English summary
    Anti Hindu, Anit Nation, Adult content these are the main categories are followed by the webseries which are going viral in India recent times. Now, many of the people wants a censor board for webseries too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X