மத்திய அரசு விருது பெறும் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து!
சென்னை: மத்திய அரசு விருது பெற உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவையொட்டி கோவாவில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், தங்களுக்கு "இந்த ஆண்டின் சிறந்த திரையுலக பிரபலம்' என்ற விருதினை மத்திய அரசு வழங்க உள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும் எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications