மஞ்சுவாரியருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய மத்திய அரசு.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை : மலையாள நடிகை மஞ்சு வாரியரை மத்திய அரசு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டி உள்ளது.

Recommended Video

Manju Warrier Throw back Interview | Filmibeat Tamil

மலையாள சினிமாவில் எவர்கீரின் நடிகையாக விளங்கும் மஞ்சு வாரியார் மலையாளத்தில் புதுப்புது கதாநாயகிகள் வந்தாலும் கூட தற்போதும் அவர்களுக்கு போட்டியாக களத்தில் நின்று முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

17 வயதில் மலையாளத் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார் மஞ்சுவாரியர். முதல் படமே பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து மளமளவென படவாய்ப்புகள் குவிந்து உச்சத்திற்கு சென்றார். வருடத்திற்கு ஏழு, எட்டு படங்கள் மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியாகி கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போதைய சூப்பர் ஸ்டார் மலையாள நடிகர்கள் அனைவருமே மஞ்சு வாரியர் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆர்வமாக இருந்தனர்.

Central Government credential for Manju Warrier

சினிமாவில் படு பிஸியாக இருந்த மஞ்சுவாரியர் 1998 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். பல வருடங்கள் நன்றாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். திருமணத்திற்குப் பிறகு பல வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் குடும்பம் குட்டி என்று இருந்த மஞ்சுவாரியர் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' என்ற படத்தில் நடித்து மீண்டும் ரீஎன்ட்ரி சொடுத்தார்.

எந்த ஒரு நடிகைக்கும் ரீ என்ட்ரி அவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை. மீண்டும் மஞ்சு வாரியரை கேரள ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தனர். அதன் விளைவு 42 வயதிலும் நிற்க நேரமில்லாமல் ஏகப்பட்ட படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், மத்திய அரசு மஞ்சு வாரியரை சான்றிதழ் வழங்கி பாராட்டி உள்ளது. அதாவது மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியும், நேர்மையாக வரி செலுத்தும் பிரபலங்களை பாராட்டும் வகையில் நற்சான்றிதழ் அளித்து வருகிறது. அந்த வகையில், நடிகை மஞ்சு வாரியரை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது.

கடந்த 2021-22ம் ஆண்டுக்கான வரியை முறையாகக் கட்டியதால் இந்த சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல மலையாள தயாரிப்பாளார் அந்தோணி பெரும்பாவூருக்கும் இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது. இவர் சமீபத்தில் வெளிவந்த லூசிஃபர், த்ரிஷ்யம், மரைக்காயர் உள்பட 32 படங்களை தயாரித்துள்ளார். இவர் மோகன்லாலின் நெருங்கிய நண்பர் ஆவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X