2019ல் பொன்விழா கண்ட கோவா பிலிம் ஃபெஸ்டிவல்.. ரஜினிக்கு ஐகான் விருது.. கொண்டாடிய தமிழ் சினிமா!

சென்னை: 2019ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல முக்கிய சம்பவங்கள் நடைபெற்றாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு ஐகான் விருது வழங்கியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நடிகர் ரஜினிகாந்த் 1975ஆம் ஆண்டு இயக்குநர் பாலச்சந்தரின் அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

44 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார். தற்போர் தனது 168வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

சர்வதேச திரைப்பட விழா

சர்வதேச திரைப்பட விழா

ஒவ்வொரு படத்திலும் ஒரு ஸ்டைல், ஒரு பஞ்ச் டயலாக் என அசத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி கோவாவில் 50வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது.

ரஜினிகாந்துக்கு விருது

ரஜினிகாந்துக்கு விருது

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மத்திய அமைச்சர்கள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து வாழ்நாள் சாதனையாளர் விருதான ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிளி விருதை மத்திய அரசு நடிகர் ரஜினிகாந்தை கவுரவித்தது.

குவித்துள்ள விருதுகள்

குவித்துள்ள விருதுகள்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இணைந்து நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த விருதினை வழங்கினர். நடிகர் ரஜினிகாந்த் இதுவரை பிலிம் ஃபேர் விருதுகள், தமிழக அரசின் விருதுகள் என ஏராளமான விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார்.

மகுடத்தில் வைரக்கல்

மகுடத்தில் வைரக்கல்

மத்திய அரசும் அவரது சாதனைகளை பாராட்டி பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. ஆனால் ரஜினிகாந்த் இதுவரை ஒரு தேசிய விருதை கூட பெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிளி விருதை வழங்கி மத்திய அரசு அவரது மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதித்துள்ளது.

இந்தியளவில் ட்ரென்ட்

இந்தியளவில் ட்ரென்ட்

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிளி விருது வழங்கப்பட்டதை ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் கொண்டாடியது. இந்த விருதால் டிவிட்டரில் இந்தியளவில் ட்ரென்ட்டானார் ரஜினிகாந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X