CBFC: சென்சாரில் அதிரடி மாற்றம்.. ஜன நாயகனுக்கும் பொருந்துமா? இனிமேல் இதை செய்தால் போதுமாம்!
சென்னை: கதை எழுதி, திரைக்கதை அமைத்து, தயாரிப்பாளரை சம்மதிக்க வைத்து, படத்திற்குரிய பட்ஜெட்டை நிர்ணயித்து, நடிகர்களை தேர்வு செய்து, பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் ஒரு படத்தை முழுவதுமாக எடுத்து, எடிட் செய்து சென்சாருக்கு கொண்டு செல்வதே பெரும் போராட்டம். அப்படி போவதற்குள் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து படத்தை இந்த தேதியில் ரிலீஸ் செய்ய வேண்டும் எனவே, அதற்குள் எல்லா வேலைகளையும் முடித்து சென்சாருக்கு அனுப்பி சான்றிதழ் வாங்க வேண்டும். சென்சார் பெறுவது ஜனரஞ்சகமான படங்கள் தொடங்கி அழுத்தம் திருத்தமான ஆர்ட் ஃபிலிம்கள் வரை ரொம்பவே நெருக்கடியானதுதான்.
ஒரு படத்திற்கு சென்சாருக்கு ஒரு படக்குழுவினர் விண்ணப்பிகிறார்கள் என்றால் அந்த படத்தை பார்த்து சென்சார் வழங்க, சென்சார் நிறுவனத்திற்கு கொடுக்கப்படும் கால அவகாசமானது 60 நாட்கள். இந்த 60 நாட்களுக்குள் படத்தை பார்த்து சென்சார் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்பது விதி. சென்சார் பெறுவதற்கு முன்னர் படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதியை நிர்ணயிக்க கூடாது. அப்படி நிர்ணயித்தாலும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யக்கூடாது. அப்படி விளம்பரம் செய்தால் அது விதிகளுக்கு எதிரானது. அதே நேரத்தில் படத்திற்கு சமூக வலைதளங்களில் தேதி குறிப்பிட்டு விளம்பரம் செய்வது என்பது பிரச்னைக்குரியது அல்ல.

புது விதிகள்: இப்படி இருக்கையில் இனிமேல் ஒரு படத்திற்கு சென்சார் வழங்க சென்சார் நிறுவனம் 18 நாட்கள் கால அவகாசத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் வழங்கும் என்றும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். மேலும் குறும்படங்களுக்கு மூன்று நாட்களில் சென்சார் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் மொத்த திரையுலகினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஜன நாயகன்: இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பலருக்கும் இந்த விதிமுறைகள் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கும் பொருந்துமா? பொருந்தாதா? என்றும் கேள்வி ஏற்பட்டுள்ளது. ஜன நாயகன் படத்தின் சென்சார் பிரச்னை தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், வழக்கு முடிந்த பின்னரோ அல்லது படக்குழு வழக்கை வாபஸ் பெற்ற பின்னரோ தான் படம் சென்சாருக்கே செல்லும். படத்திற்கு சென்சார் வேண்டி படக்குழு புதிதாக அப்ளை செய்தாலும் படத்திற்கு மூன்று வார காலத்திற்குள் சென்சார் கிடைத்துவிடும். அதன் பின்னர் தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்பதால் படத்தை பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











