twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்மயி போட்ட ஒத்த டிவிட்.. பறந்துபோன பட்டம்.. அதான் காரணமா? பாவம்யா அவரு.. மோசம் பண்ணிட்டீங்களே!

    |

    சென்னை: தனியார் பல்கலைக்கழகத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்பதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீரென ரத்து செய்துள்ளார்.

    சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு நாளை (28 -ம் தேதி) கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

    பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது கடந்த ஆண்டு பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து அவர் மீதான குற்றச்சாட்டில் உறுதியாக இருந்தார் சின்மயி.

    2019ல் உங்களை ரசிக்க வைத்த ஹீரோ யாரு.. ஓட்டு போட்டு பதிலை சொல்லுங்க!

    நீக்கப்பட்ட சின்மயி

    நீக்கப்பட்ட சின்மயி

    வைரமுத்து மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக பலர் வரிந்துக்கட்டிக் கொண்டு சின்மயியை விளாசினர். திரைத்துறையிலும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. டப்பிங் கலைஞர் சங்கத்தில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார் சின்மயி.

    மத்திய அமைச்சர்

    மத்திய அமைச்சர்

    இந்நிலையில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் இன்று நடைபெறும் விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    விமர்சித்த சின்மயி

    விமர்சித்த சின்மயி

    இதற்கான அழைப்பிதழ்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, வைரமுத்துவை கடுமையாக விமர்சித்திருந்தார் சின்மயி.

    உயர்மட்டக்குழு

    உயர்மட்டக்குழு

    சமூக வலைத்தளங்களில் கடந்த ஆண்டு தன்னெழுச்சியாக உருவான ‘மீடூ இயக்கம்' ஏற்படுத்திய தாக்கத்தால் பணியிடங்களில் பெண்களுக்கு அளிக்கப்படும் பாலியல் தொல்லை தொடர்பாக விசாரிப்பதற்கென மத்திய அரசின் சார்பில் ஒரு உயர்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக மத்திய உள்துறையின் முன்னாள் மந்திரியும் தற்போதைய ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமை ஏற்பார் என அறிவிக்கப்பட்டது

    வேடிக்கையாக உள்ளது

    ஆனால், பெயரளவில் அமைக்கப்பட்ட இந்த குழு ஒருமுறை கூட எந்த பாலியல் புகார் தொடர்பாகவும் விசாரிக்கவில்லை. இந்த குழுவின் தலைவராக இருந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பாலியல் புகாரில் சிக்கிய கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது மிகவும் வேடிக்கையாக இருப்பதாக சின்மயி குறிப்பிட்டிருந்தார்.

    திடீர் ரத்து

    திடீர் ரத்து

    சின்மயின் டிவிட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பரவலாக இருந்து வந்தது. இந்நிலையில் தனியார் பல்கலைக்கழகத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்பதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீரென ரத்து செய்துள்ளார்.

    மதிப்பளிக்கும்

    தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வைரமுத்துவுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட இருந்த நிகழ்விலிருந்து இராணுவ அமைச்சர் விலகியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. நான் சொன்னது போல், தமிழர்களின் உணர்வுகளுக்கும், தொண்டர்களின் வேண்டுதலுக்கும் எப்போதும் பா.ஜ.க மதிப்பளிக்கும் என தெரிவித்திருந்தார்.

    பட்டமும் பறந்துபோனது

    மேலும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் வருகை மட்டும் நிறுத்தப்படவில்லை, வைரமுத்துவுக்கு கொடுக்கப்பட இருந்த கெளரவ முனைவர் பட்டமும் பறந்து போனது என தெரிவித்துள்ளார்.

    வைரமுத்து பெயர் இல்லை

    வைரமுத்து பெயர் இல்லை

    மேலும் புதிய அழைப்பிதழையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில் வைரமுத்துக்கு டாக்டர் பட்டம் வழங்குவது குறித்த எந்த தகவலும் இல்லை. இதனால் தனியார் பல்கலைக் கழக விழாவில் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    இதுதான் காரணம்

    இதனால் சின்மயின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் டாக்டர் பட்டம் மறுக்கப்பட்டதற்கு மீடூ புகார் மட்டும் காரணமல்ல, ஆண்டாள் குறித்த சர்ச்சைக் கருத்து தான் முக்கிய காரணம் என்றும் பேச்சு எழுந்துள்ளது.

    English summary
    Rajnath Singh cancels his visit to confer Doctorate to Vairamuthu. Vairamuthu is also not being conferred with the Doctorate.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X