அமரன் படத்திற்கு குவியும் பாராட்டு.. மத்திய அமைச்சரை சந்தித்த சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழு!
டெல்லி: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்து மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக வெளியாகியுள்ளது அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் கேரக்டர்கள் மிகவும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சாய் பல்லவி இந்து ரெபெக்கா வர்கீசாகவே காட்சியளிப்பதாக முகுந்த் வரதராஜனின் பெற்றோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுபோன்று படத்திற்கு அடுத்தடுத்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நடிகர் விஜய் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அமரன் படம்: நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படத்தில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதைக்களமாக எடுத்திருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் இந்த படம் வசூலையும் குவித்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான படிப்பை படித்துவரும் நிலையில் அவர் இந்த வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட முடியவில்லை.
ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு: ஆனால் கமல்ஹாசன் முன்னதாக படத்தின் ப்ரோமோஷன்களில் சிறப்பாக பங்கேற்றிருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைத்துறை பிரபலங்களும் அடுத்தடுத்து பாராட்டுகளை குவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய்யும் இந்த படத்தை பாராட்டி ராஜ்குமார் உள்ளிட்ட படக்குழுவினரை சந்தித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அமரன் படக்குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளனர், இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
பாராட்டிய மத்திய அமைச்சர்: இந்த சந்திப்பின்போது நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ஆகியோர் இருந்தனர். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. மேலும் இந்த சந்திப்பின்போது முன்னாள் ராணுவ கர்னல் சரவண வினோத் ஆகியோரும் உடனிருந்தனர். மேஜர் முகுந்தின் தேசப்பற்று மற்றும் இந்திய ராணுவம் குறித்து சிறப்பாக படத்தை உருவாக்கியதற்கு தன்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை ராஜ்நாத் தெரிவித்ததாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சருக்கு நன்றி: இதனிடையே இந்தப் படத்தை உருவாக்க உறுதுணையாக இருந்த இந்திய ராணுவ அமைச்சகம் மற்றும் ராணுவத்தினருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு படக்குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர். இதனாலேயே உண்மை தன்மையுடன் இந்திய ராணுவ நாயகர்களை வெளிப்படுத்த முடிந்ததாகவும் படக்குழுவினர் நெகிழ்ச்சியையும் வெளிப்படுததினர். இந்த நிகழ்வின்போது படக்குழுவினர் ராஜ்நாத் சிங்குடன் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











