சந்திரபாபு கேரக்டர் என் கனவு கதாபாத்திரம்.. சொல்றது யாருன்னு பாருங்க!

சென்னை: சந்திரபாபு கேரக்டர் என் கனவு கதாபாத்திரம் என நடிகர் சாம்ஸ் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவுல ரொம்ப முக்கியமான ஒரு காமெடி நடிகர் சாம்ஸ விஸ்வநாதன். நம்ம கிரேசி மோகன் உடைய டிராமா ட்ரூப்ல வாழ்க்கையை ஆரம்பிச்சாரு. அதுக்கு அப்பறம் தமிழ் சினிமாவில் வந்த ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் அவர் ஏகப்பட்ட தமிழ் சினிமால வித்தியாசமான திரைப்படங்கள் எல்லாம் பண்ண ஒரு அற்புதமான காமெடி நடிகர்.

Chaams becomes Lyricist

இவர் இப்போது ஒரு புதிய விஷயத்தை செஞ்சிருக்கார் என்ன அப்படின்னா அவருக்கு சந்திரபாபுவா நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு-
ஒரு புது இயக்குனர் வந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்த போது, சந்திரபாபு பாடிய பாட்டு ரொம்பவே பிரபலம் ஆன ஹிட்டான ஒரு சாங் தான் "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை" இந்த பாட்டை ரி மிக்ஸ் பண்ணி அனுப்பி வைத்திருந்தார் இயக்குனர் - அந்த பாட்டு சாம்ஸ் விஸ்வநாதன் என்ன பண்ணார்னா புது புது வார்த்தைகள் எல்லாம் போட்டு எழுதி இருக்கிறார் அப்படி எழுதின இந்த பாட்டு இன்னைக்கு உண்மையிலேயே நிறைய இடங்களில் வைரலா பேசப்படுது. அவ்வளவு அற்புதமான வரிகளை எழுதி இருக்கிறார் .

சாம்ஸ் கூறும்போது - இயக்குனர் ஹரிஹரன் என்பவர் சினிமாவின் மீது காதலும் பற்றும் வெறியும் கொண்டவர். சினிமா தொழில் இன்று ஒரு சங்கடமான நிலைமையில் இருப்பதற்காக வேதனைப்படுபவர் எனினும் அந்தத் துறையில் ஏதேனும் சாதிக்க நினைப்பவர் .அவர் இயக்கப்போகும் ஒரு படத்தில் என்னை சந்திரபாபு சார் அவர்களின் பாடலான " புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை" ஐ புதிய வரிகளோடு ரீமிக்ஸ் செய்து அனுப்பியிருந்தார்... அதில் சினிமா துறையின் அவலங்களை விளக்கியிருந்தார்....

Chaams becomes Lyricist

வேறு ஒரு கோணத்தில் அந்த பாடலுக்கு சாம்ஸ் எழுதிய வரிகள்

பயிற்சி ஓடும் முயற்சியோடும் படமெடுக்க வாங்க
தெரியலைன்னா பேசாம
வாய மூடிட்டு போங்க
வாய மூடிட்டு போங்க
( பயிற்சி ஓடும்...)
சுட்ட கதைய சொந்த கதையா படம் எடுக்குறாங்க
சொற்ப காசில் அற்ப படத்த
எடுத்து வைக்கிறாங்க
எடுத்த படத்தை விற்பதற்குள்
முழி பிதுங்குறாங்க
ஓடலன்னா ஊரு மேல பழிய போடுறாங்க
( பயிற்சி ஓடும்...)
நேரம் காலம் பார்த்து படத்தை எடுத்து வைக்கும் நீங்க
நேர்மையோடும் உண்மையோடும் படம் எடுக்க வாங்க
நல்ல படத்தை மக்கள் தினம் கொண்டாடு வாங்க
திறமையோடு தெளிவிருந்தால்
வெற்றி வரும் போங்க
( பயிற்சி ஓடும்...)

சந்திரபாபு வேடம் என்பது சார்ம்ஸ்க்கு நீண்ட நாள் கனவு - இதில் பாடல் ஆசிரியர் வேலை பார்த்தது மட்டற்ற மகிழ்ச்சி என்று பெருமையாக சொல்கிறார்.உண்மையிலேயே இப்படி ஒரு அற்புதமான முயற்சியை செய்த இந்த பன்முகம் கொண்ட சார்ம்ஸ்க்கு தமிழ் பிலிம் பீட் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்

More from Filmibeat

Read more about: tamil comedy actor
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X