கருப்பு காலாவுக்கு சிகப்பு தாதா வாழ்த்து
காலா படத்துக்கு சாருஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: காலா படத்துக்கு சாருஹாசன் தனது வாழ்த்துகளை அவர் நடிக்கும் தாதா 87 பட போஸ்டரில் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் காலா கரிகாலன் என்ற திரைப்படம் இன்று வெளியானது. அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்த பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இந்த படம் வெளியாகக் கூடாது என்று கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் எதிர்ப்புகளை தாண்டி வெளியாகிவிட்டது.

சாருஹாசன் வாழ்த்து
காலா திரைப்படம் வெற்றி பெற சாருஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் நடிக்கும் தாதா 87 படத்தின் போஸ்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபகாலமாக தம்பி கமல்ஹாசனை காட்டிலும் ரஜினியையே சாருஹாசன் ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சிவப்பு நிற போஸ்டரில் கருப்பு காலா விளம்பரத்தை பயன்படுத்தியுள்ளார் சாருஹாசன்.

சாருஹாசன் படம்
சாருஹாசன் தந்தை கேரக்டர், குணசித்திர வேடங்களில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஆனால் முதல் முறையாக தாதா 87 படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஏஜிங் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

மிரட்டும் சாரு
காமெடி மற்றும் திரில்லர் கலந்து இந்த திரைப்படத்தின் கால அளவு வெறும் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும். வெள்ளை நிற முறுக்கு மீசையுடன்
கோபம் கொப்பளிக்கும் வகையில் சாருஹாசன் ஒரு பார்வை பார்க்கும் போஸ்டர் மிகவும் பிரபலம்.

கீர்த்தியின் பாட்டி
தாதா 87 படத்தில் சாருஹாசனுக்கு ஹீரோயினாக நடித்தவர் சரோஜா. இவர் நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டியாவார். சரோஜா, சாருஹாசனின் நண்பராம். அதனால் அவர் நடிக்க கேட்டவுடன் சரோஜா ஒப்புக் கொண்டார். சரோஜாவும் கீர்த்தி சுரேஷும் ரெமோ படத்தில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











