ஹாலிவுட் நடிகர்.. 'ப்ளாக் பேந்தர்' சாட்விக் போஸ்மேனின் இரங்கல் செய்தி.. ட்விட்டரில் சாதனை

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: சாட்விக் போஸ்மேனின் ட்விட்டர் கணக்கிலிருந்து பதிவிடப்பட்ட இரங்கல் செய்தி, ட்விட்டரில் சாதனை படைத்துள்ளது.

Recommended Video

ஆண் குயில் எஸ்பிபி.. இசைத்துறைக்குள் வந்தது எப்படி? சுவாரசிய தகவல்கள்

பிரபல ஹாலிட் நடிகர் சாட்விக் போஸ்மேன். தி எக்ஸ்ப்ரஸ் தி எர்னீ டேவிஸ் ஸ்டோரி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்.

இதில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். பிறகு 2013 ஆம் ஆண்டு 42 என்ற படத்தில் நடித்தார்.

கெட் ஆன் அப்

கெட் ஆன் அப்

அமெரிக்க பேஸ்பால் வீரர் ஜாக்கி ராபின்ஸன் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. சாட்விக் போஸ்மேனுக்கு அங்கீகாரத்தை வழங்கியது. அடுத்து புகழ்பெற்ற பாடகரான ஜேம்ஸ் பிரானின் வாழ்க்கை கதையான கெட் ஆன் அப் என்ற படத்தில் நடித்தார். இந்த படமும் சாட்விக்கிற்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

பிளாக் பாந்தர்

பிளாக் பாந்தர்

அடுத்து நடித்த மார்ஷல் படத்தில் துர்கூட் மார்ஷலாக நடித்திருந்தார். இந்த கேரக்டர்களில் நடித்திருந்தாலும் மார்வெலின் சூப்பர் ஹீரோ படமான பிளாக் பாந்தர் படத்தில் நடித்தது அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சாட்விக் போஸ்மேன் கடந்த 28 ஆம் தேதி உயிரிழந்தார்.

சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

கடந்த 4 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தும் உயிரிழந்தார். இது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சி யையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அவரின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.

ட்விட் சாதனை

ட்விட் சாதனை

அவர் மறைவு குறித்து குடும்பத்தினர், அவரது அதிகாரபூர்வ ட்விட்டரில் புகைப்படம் மற்றும் அறிக்கை வெளியிட்டனர். இதன் மூலமே உலகமெங்கும் அவரது மறைவு குறித்து தெரியவந்தது. அதில், அவருக்கு பெருங்குடல் புற்றுநோய், நான்காம் நிலைக்கு சென்றது பற்றியும் அதனால் அவர் உயிரிழந்தார் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த ட்வீட், ட்விட்டர் தளத்தில் சாதனை புரிந்துள்ளது.

சரியான அஞ்சலி

சரியான அஞ்சலி

அந்த ட்வீட்டை 7.8 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். மேலும், 4 மில்லியன் பேர் ரீட்வீட் செய்துள்ளனர். ட்விட்டரில் அதிகம் பேர் லைக்ஸ் செய்த ட்வீட்டாக அது இடம்பெற்றுள்ளது. அந்தப் பதிவு குறித்து, இது அதிக லைக்ஸ் பெற்ற ட்வீட் என்றும் ராஜாவுக்கு சரியான அஞ்சலி இது எனவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X