விஷாலின் சக்ரா 19ந் தேதி ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!
சென்னை: விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,ரெஜினா நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் சக்ரா.
இந்த படத்தை ஆனந்தன் இயக்கியுள்ளார், யுவன் இசையமைத்துள்ளார், விஷால் தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு விஷால் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதல் திரைப்படம்
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் எழில். இவரின் உதவியாளராக பணிபுரிந்தவர் தான் ஆனந்தன். சக்ரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் ஆனந்தன். ஆன்லைன் முறைகேட்டை அடிப்படையாக வைத்து சக்ரா படம் தயாராகியுள்ளது.

யுவனின் இசை
சக்ரா படத்தின் அசத்தலான ட்ரைலர் முன்னரே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், யுவனின் இசையில் Scream Of Darkness Theme ஐ படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் யுவன் ரசிகர்களுக்கு Scream Of Darkness Theme விருந்தாக அமைந்துள்ளது.

படப்பிடிப்பு பாதிப்பு
கொரோனா தொற்று காரணமாக பல படங்கள் வெளிவராமல் நிலுவையில் உள்ளது. சக்ரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு லாக்டவுனின் போது பெரிதும் பாதிக்கப்பட்டு பின்னர் படக்குழு முழு வீச்சில் செயல்பட்டு திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடு செய்துள்ளது.

சிக்கலில் விஷால்
பைனான்சியர் விஜய் கோத்தாரிக்கு கடன் தொகை ரூ.58.35 லட்சம் விஷால் தர வேண்டியதுள்ளது. இருப்பினும் சக்ரா படத்தை இந்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விஷால் ரசிகர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











