மோடியின் குழந்தை பருவ கதையை சொல்லும் சலோ ஜீத் ஹைன் - தேசிய விருது

சென்னை: சலோ ஜீத் ஹைன் குறும்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது குழந்தை பருவத்தில் தன் முன் இருந்த கடுமையான பாதைகளை எப்படி வெற்றிப் படிக்கற்களாக மாற்றினார் என்பதை கூறியுள்ளனர். இந்த வெற்றியை பகிரும் வகையில் தமிழகத்தில் இத்திரைப்படத்தை திரையிட உறுதுணையாக இருந்த அனைவருக்கும் டிவோ நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி படத்தில் விவேக் ஓபராய் நடித்திருக்கிறார். அதில் பிரதமராக அவர் எப்படி உயர்ந்தார் என்பதை படம் பிடித்து காட்டுகிறது. அதே போல நரேந்திர மோடியின் குழந்தை பருவத்தை சொல்லும் வாழ்க்கை வரலாறு சலோ ஜீத் ஹைன் எனும் குறும்படமாக 2018ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மஹாவீர் ஜெயின் மற்றும் பூஷன் குமார் தயாரிப்பில் மங்கேஷ் ஹடவாலே எழுதி இயக்கியுள்ளனர்.

Chalo Jeete Hain-Narendra Modi’s Biopic

சுமார் 32 நிமிடத்திற்கு நீடிக்கும் இந்த குறும்படத்தில் சுவாமி விவேகானந்தரின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு வாழ்க்கையை கண்டறியும் ஒரு சிறுவனின் நோக்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அவன் வாழ்வில் உண்மையை கண்டறிவதற்காக மேற்கொள்ளும் பயணத்தைப் பற்றின கதை இது.

இதில் 25% கற்பனை படைப்பு ஆனால் 75 சதவிகிதம் உண்மையாக மோடி அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம். இப்படத்தில் தேவ் மோடி, தீப்தி, ராஜீவ் சக்சேனா, டைரியா தர்ஜி, தீப்தி அவ்லான் மற்றும் கின்னஸ் பக்ரு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் சலோ ஜீத் ஹைன் குறும் படம் தேசிய குடும்ப நல படத்திற்கான விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழிலும் இந்த குறும்படம் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த குறும்படத்தின் வெற்றியை பகிரும் வகையில், இந்த குறும்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு பெரும் பங்களித்த டிவோ நிறுவனம், இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

மேலும் இப்படம் தமிழகம் முழுவதும் விநியோகிப்பதற்கு உறுதுணையாக இருந்த லைக்கா புரொடக்ஷன்ஸ் மகாவீர் ஜெயின் மற்றும் ஆனந்த்.எல்.ராய் ஆகியோருக்கும் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இந்த குறும்படத்தை கொண்டு செல்ல உதவிய திரு திருமதி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

இந்த குறும்படத்தின் மூலம் நரேந்திர மோடி அவர்கள் கடந்து வந்த கடுமையான பாதைகளை அவர் எப்படி வெற்றிப் படிக்கற்களாக மாற்றினார் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X