Don't Miss!
- Automobiles விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோலாகலமாக நடந்த சாம்பியன் இசை வெளியீடு !
Recommended Video
சென்னை: இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள "சாம்பியன்" திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு பெறும். நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்து, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு அத்தனை இயல்புகளோடும் மக்களின் வாழ்க்கையில் கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் சுசீந்திரன்.
விஷ்வா இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். மிருணாளினி, சௌமிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மனோஜ், நரேன், ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.கே.சுரேஸ், களஞ்சியம் என்னோட அப்பா, அவரின் நினைவாகத்தான் இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சிருக்கோம். அவரோட பேரனை இந்தப்படத்தில் அறிமுகப்படுத்தினதுக்கு சுசீந்தரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என்றார். சுசீந்திரன் ஸ்போர்ட் படங்களை எடுப்பதில் வல்லவர் அவருக்கு மேலும் நல்லப்பெயரை தேடித்தரும் படமாக சாம்பியன் அமையும் என்றார்.
மேலும் இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் அப்புகுட்டி "சாம்பியன்" படம் பார்த்தேன் விஷ்வா ஒரு அறிமுக நடிகர் போலவே இல்ல, நல்லா நடிச்சிருக்கார். எங்க டைரக்டரால யார் வேணா எப்படி வேணும்னாலும் உருவாக்க முடியும்னு தெரிஞ்சது. ஹீரோயின் பார்த்தவுடனே லவ் பண்ற மாதிரி அழகா இருக்காங்க. படம் சூப்பரா வந்திருக்கு. படம் ஜெயிக்க வாழ்த்துக்கள் என்றார்.