twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “சாம்பியன்”.. அடுத்த ‘ஆட்டத்தை’ ஆரம்பித்தார் சுசீந்திரன்!

    இயக்குநர் சுசீந்திரனின் சாம்பியன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

    |

    Recommended Video

    சாம்பியன் பட ஷூட்டிங் ஆரம்பம் : வைரலாகும் சுசீந்திரன் ட்வீட்- வீடியோ

    சென்னை: கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கும், 'சாம்பியன்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

    வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, நான் மகான் அல்ல உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவரது இயக்கத்தில் கடைசியாக 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் ரிலீசானது. அதனைத் தொடர்ந்து 'ஏஞ்சலினா' என்ற படத்தை இயக்கினார் சுசீந்திரன். புதுமுகங்கள் நடித்த இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

    இதற்கிடையே 'ஜீனியஸ்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ள சுசீந்திரன், தனது அடுத்த பட படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளார்.

    கால் பந்தாட்ட கதைக்களம்:

    கால் பந்தாட்ட கதைக்களம்:

    இப்படத்திற்கு சாம்பியன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கால் பந்தாட்டத்தை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ரோஷன் மற்றும் மிருணாளினி என்ற புதுமுகங்கள் நாயகன், நாயகியாக அறிமுகம் ஆகின்றனர்.

    டிவிட்டர் பக்கத்தில்:

    இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் சுசீந்திரன் கூறியிருப்பதாவது, "`இன்று கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து `சாம்பியன்' என்ற திரைப்படத்தை துவங்கி உள்ளோம். வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா திரைப்படத்தை தொடர்ந்து நான் இயக்கும் மூன்றாவது ஸ்போர்ட்ஸ் திரைப்படம்.

    டிசம்பர் வெளியீடு:

    இத்திரைப்படத்தில் ரோஷன் என்ற புதுதுமுக கதாநாயகன் அறிமுகமாகிறார். அஞ்சாதே நரேன், ஜி.கே.ரெட்டி, ஜெயப்பிரகாஷ் இவர்களுடன் மிருணாளினி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.

    விளையாட்டு கதைக்களம்:

    விளையாட்டு கதைக்களம்:

    ஏற்கனவே, விளையாட்டை மையப்படுத்தி சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக் குழு, ஜீவா ஆகிய இருபடங்கும் வெற்றி பெற்றது. எனவே, விளையாட்டை மையப்படுத்தி சுசீந்திரன் இயக்கும் மூன்றாவது படமான சாம்பியனுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

    English summary
    The shooting of director Suseenthiran's next titled 'Champion' that is based on football, starts from today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X