twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலக சினிமா விரும்பிகளுக்கு ஸ்பானிஷ் படங்களைப் பார்க்க அரிய வாய்ப்பு!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : சென்னையில் வருகிற அக்டோபர் 23 மற்றும் 24-ம் தேதிகளில் ஸ்பானிஷ் திரைப்பட விழா நடக்கிறது. இந்திய திரைப்படத் திறனாய்வு கழகம் மற்றும் டெல்லியில் உள்ள ஸ்பெயின் தூதரகம், சென்னையில் உள்ள ஸ்பெயின் துணை தூதரகம் ஆகியவை இணைந்து இந்தப் பட விழாவை நடத்துகின்றன.

    நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தில் நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவை ஸ்பெயின் துணைத் தூதர் ஆன்டனி லோபா துவக்கி வைக்கிறார்.

    Chance to see the Spanish films for world cinema lovers

    23ம் தேதி 'தி காம் ஸ்ட்ரோம்',' ஸ்கோட்ரா', 'ஐ லேண்ட் ஆஃப் ஜெனிஸ்' ஆகிய படங்களும், 24-ம் தேதி 'மதர்டங்க்', 'புருமையர்' ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன. இரண்டு நாட்களும் மாலை 6 மணிக்கு ஸ்பானிஷ் படங்களின் திரையிடல் தொடங்கும்.

    இந்தத் திரைப்படத் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். இந்தத் தகவல்கள் இந்திய திரைப்படத் திறனாய்வு கழகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    English summary
    The Spanish Film Festival takes place on October 23 and 24 in Chennai. Spain's Deputy Ambassador Antony Lopa launches this ceremony at the France Cultural Center in Nungambakkam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X