பிக் பாஸ் 3: பாலாஜி சக்திவேல் படத்தில் பிசி.. அப்போ கன்பார்மா அந்த நடிகை கலந்துக்க மாட்டாங்க!

பாலாஜி சக்திவேலின் புதிய படமொன்றில் நடித்து வருகிறாராம் நடிகை சாந்தினி.

By Staff

சென்னை: பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் நடிகை சாந்தினி. இதனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது சந்தேகம் தான் எனத் தெரிய வந்துள்ளது.

இசக்கி துரை தயாரிப்பில் யார் இவர்கள் என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இப்படம் சிலப்பல காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. தற்போது பாலாஜி சக்திவேல் தனுஷின் அசுரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

chandini in balaji sakthivels next

இந்நிலையில், நடிப்பிற்கு இடையே சத்தமில்லாமல் பாலாஜி சக்திவேல் படம் ஒன்றை இயக்கி வருவது தற்போது தெரிய வந்துள்ளது. புதுமுகம் நாயகனாக நடிக்கும் அப்படத்தில் நாயகியாக சாந்தினி நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க நாயகியை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறதாம். மேக்கப் இல்லாமல் இப்படத்தில் சாந்தினி நடித்துள்ளாராம். விரைவில் இப்பட இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தான் டான்ஸ் மாஸ்டர் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் சாந்தினி. இவர் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சாந்தினியும் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது பாலாஜி சக்திவேல் படத்தில் நடித்து வருவது தெரிய வந்துள்ளதால், சாந்தினி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை அடுத்த மாதத்திற்குள் இப்பட வேலைகள் முடிந்து விட்டால், சாந்தினியை பிக் பாஸ் வீட்டில் பார்க்கலாம். இல்லையென்றால் நிகழ்ச்சியின் இடையில் வரும் போட்டியாளராக அவரை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X