துணிச்சலாக சில காட்சிகளில் நடித்துள்ளேன்..! அது நிச்சயம் பேசப்படும்.. நடிகை சாந்தினி!
வஞ்சகர் உலகம் குறித்து நடிகை சாந்தினி பேசியுள்ளார்
சென்னை: வஞ்சகர் உலகம் படத்தில் துணிச்சலாக சில காட்சிகளில் நடித்திருப்பதாக நடிகை சாந்தினி தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் த்ரில்லர் திரைப்படம் வஞ்சகர் உலகம். இப்படத்தில் குரு சோமசுந்தரம், அனிஷா அம்ப்ரோஸ், சாந்தினி, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து பேட்டியளித்த நடிகை சாந்தினி, 'படக்குழுவினர் ஐம்பது சதவிகித படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகுதான் தன்னுடைய கதாப்பாத்திரத்திற்காக அணுகியதாக' தெரிவித்துள்ளார்.
மேலும், 'இப்படத்தில் நீண்ட நாட்களுக்கு ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கக் கூடிய ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு கேங்ஸ்டர் படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. மிகத் தைரியமாக இறங்கி சில சீன்களில் நடித்திருக்கிறேன் அது நிச்சயம் பேசப்படும்" என்றார்.
நடிகர் குரு சோமசுந்தரம் பற்றிக் கூறும்போது, மிகச்சிறந்த நடிகர் என்றும், அவரை படப்பிடிப்பு தளத்தில் குருவாக பார்க்க முடியவில்லை சம்பத் என்ற கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் திரைக்கதை ஆசிரியர் வினாயக் விகேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இயக்குனர் மனோஜ் பீதா எஸ்பி,ஜனநாதனிடம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வஞ்சகர் உலகம் திரைப்படம் வரும் ஏழாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications











