ஸ்ரேயாவின் சந்திரா சாட்டிலைட் உரிமத்தை ரூ.4 கோடிக்கு வாங்கிய சன் டிவி

By Siva

பெங்களூர்: ஸ்ரேயா, கன்னட நடிகர் பிரேம்குமார் நடிப்பில் உருவாகி வரும் சந்திரா படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ரூ.4 கோடி கொடுத்து சன் டிவி மற்றும் உதயா டிவி வாங்கியுள்ளது.

இளம் இயக்குனர் ரூபா ஐயர் தமிழ் மற்றும் கன்னடத்தில் எடுக்கும் படம் சந்திரா. ஒரு இளவரசியின் காதல் கதை. இதில் இளவரசியாக ஸ்ரேயா நடிக்கிறரார். அவருக்கு ஜோடியாக கன்னட நடிகர் பிரேம் குமார் நடிக்கிறார். இந்த படத்தில் விவேக், சுகன்யா, கணேஷ் வெங்கட்ராமன், சுமித்ரா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

சந்திரா இயக்குனர் ரூபா ஐயர், ஹீரோ பிரேம் குமார் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் கௌதம் ஸ்ரீவத்சா ஆகியோர் தட்ஸ்தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு,

ஸ்ரேயாவை கொண்டாடும் இயக்குனர்

ஸ்ரேயாவை கொண்டாடும் இயக்குனர்

இயக்குனர் ரூபா ஐயர் தனது நாயகி ஸ்ரேயாவை புகழ்ந்து தள்ளினார். ஸ்ரேயா சற்றும் ஈகோ இல்லாதவர், அனைவரிடமும் நட்புடன் பழகுபவர், டென்ஷன் ஆனாலும் அடுத்த நிமிடமே கூலாகிவிடுபவர் என்று புகழந்தார்.

இது ஹீரோயின் சப்ஜெக்ட் இல்ல

இது ஹீரோயின் சப்ஜெக்ட் இல்ல

சந்திரா என்ற பெயரைக் கேட்டதும் இது ஹீரோயின் சப்ஜெக்ட் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. படத்தில் ஹீரோ, ஹீரோயின் ஆகிய 2 பேரின் பெயருமே சந்திரா என்றார் ரூபா.

நான் தமிழ் பொண்ணுங்க

நான் தமிழ் பொண்ணுங்க

கன்னடத்தில் முகாபுட்டா என்ற படத்தை எடுத்த ரூபா தற்போது ராஜ வம்ச கதையான சந்திராவை எடுக்கிறார். இதனால் கன்னடத்து கிளியோ என்று நினைத்து கேட்டதற்கு நான் தமிழ் பொண்ணுங்க, வீட்டில் தமிழில் தான் பேசுவோம் என்றார்.

படக்குழுவை கலகலக்க வைக்கும் விவேக்

படக்குழுவை கலகலக்க வைக்கும் விவேக்

படத்தில் விவேக் ஸ்ரேயாவின் அண்ணனாக நடிக்கிறார். ராஜ குடும்பத்தாரின் தத்துப் பிள்ளையாக நடிக்கும் விவேக் வரும் காட்சிகளில் ரசிகர்கள் சீட்டில் உட்கார முடியாத அளவிற்கு குலுங்கி குலுங்கி சிரிப்பார்கள் என்றார் ரூபா. விவேக் படத்தில் மட்டும் இன்றி செட்டிலும் அனைவரையும் சிரிக்க வைக்கிறாராம்.

நானும் தமிழ் பேசுவேன்- பிரேம்

நானும் தமிழ் பேசுவேன்- பிரேம்

ஹீரோ கன்னடத்துக்காரராக இருந்தாலும் பேட்டியின்போது நான் நல்லா தமிழ் பேசுவேன் என்று கூறி தமிழில் பேட்டியளித்தார். படத்திற்காக 6 பேக் வைத்தாராம் பிரேம். பிரேம் ஸ்ரேயாவின் தீவிர ரசிகராம். அவரின் அனைத்து படங்களையும் முடிந்த வரை ரிலீஸ் ஆன முதல் நாளே பார்த்துவிடுவாராம்.

இசையமைப்பாளர் கௌதம் இளையராஜாவை நினைவூட்டுவார்

இசையமைப்பாளர் கௌதம் இளையராஜாவை நினைவூட்டுவார்

இசை குடும்பத்தில் இருந்து வந்துள்ள கௌதம் சந்திரா படத்திற்கு அருமையாக இசையமைத்துள்ளார். அவர் இளையராஜா போன்று சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்றார் ரூபா.

பக்கா கமர்ஷில் படம்

பக்கா கமர்ஷில் படம்

ராஜ பரம்பரை கதையாச்சே ஒரு வேளை ஆர்ட் படமோ என்று நினைத்தால் இது பக்கா கமர்ஷியல் படம் என்றார் இயக்குனர். படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X