சந்திரபாபு நாயுடு மகனுக்கும் கை கொடுக்கும் ரஜினியின் பஞ்ச் டயலாக்!

By Shankar

திருப்பதி: தந்தை சந்திரபாபு நாயுடுவுக்காக ஓட்டுக் கேட்டுப் பிரச்சாரம் செய்யும் மகன் லோகேஷ், ரஜினியின் பஞ்ச் டயாலாக்குகளை தெலுங்கில் பேசி மக்களைக் கவர்ந்துள்ளார்.

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டம் குப்பம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.

சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக அவரது மகன் லோகேஷ் 'யுவ பிரபஞ்சனம்' என்ற பெயரில் யாத்திரையை தொடங்கி தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.

சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினரும் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளனர். சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் தனது பிரசார கூட்டங்களில் நடிகர் ரஜினிகாந்த் தனது படத்தில் பேசும் 'பஞ்ச் டயலாக்கை' பேசி ஆதரவு திரட்டி வருகிறார்.

ரஜினி நடித்த படையப்பா படம் ''நரசிம்ஹா'' என்ற பெயரில் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி ஆந்திராவில் சாதனை படைத்தது.

இந்த படத்தில் வரும் ''அதிகமா ஆசைப்படுகிற ஆம்பிளையும், அதிகமா கோப்படுகிற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை'' என்ற பஞ்ச் மிகப் பிரபலம்.

இந்த வசனத்தை தனது பிரசாரத்தின் போது லோகேஷ் பேசி வாக்கு கேட்கிறார்.

சோனியா காந்தி, ஜெகன் மோகன் ரெட்டி இருவரையும் இந்த வசனத்தைச் சொல்லி பகிரங்கமாக தாக்குகிறார்.

"சோனியா 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் ஆசையில் மாநிலத்தை பிரித்து விட்டார்,'' என்று குற்றம் சாட்டி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X