Chandramukhi 2: மாணவனை புரட்டி எடுத்த பவுன்சர்கள்... சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் அதிர்ச்சி
சென்னை: ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகிறது.லைகா தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்துகொண்டனர். அப்போது கல்லூரி மாணவர் ஒருவர் பவுன்சர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரணாவத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் சந்திரமுகி 2. பி வாசு இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சந்திரமுகி படத்தின் 2ம் பாகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பி வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ரஜினி, வடிவேலு, ஜோதிகா கூட்டணியில் ஹாரர் ப்ளஸ் காமெடி ஜானரில் உருவான சந்திரமுகி ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் படமாக காணப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தையும் பி வாசுவே இயக்கியுள்ளதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சந்திரமுகி 2 செப்டம்பர் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இதில், ராகவா லாரன்ஸ், வடிவேலு, இயக்குநர் பி வாசு, லைகா சுபாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அதேபோல், செய்தியாளர்கள், ரசிகர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரபலங்களின் பாதுகாப்புக்காக பவுன்சர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது கல்லூரி மணவர் ஒருவர் பிரபலங்களுக்கான நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றதாக சொல்லப்படுகிறது. அதனால் அந்த மாணவரை தடுத்து நிறுத்திய பவுன்சர்கள், அவர் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட பவுன்சர்கள் சுற்றி வளைத்து தாக்கியதால், அந்த மாணவரும் நிலைகுலைந்து போனார். கல்லூரி மாணவர் மீது பவுன்சர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்தச் சம்பவத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சினிமா நிகழ்ச்சிகளில் பவுன்சர்கள் அத்துமீறி நடந்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. பொன்னியின் செல்வன் படத்தின் சிறப்பு காட்சியின் போது கூட, விக்ரம் பிரபுவுக்காக ஒரு சிறுவனையும் மூதாட்டியையும் வழிவிடுமாறு பவுன்சர்கள் விலக்கி விட்டனர். இதனைப் பார்த்த விக்ரம் பிரபு உடனடியாக பவுன்சர்களிடம் அப்படி செய்ய வேண்டாம் என எச்சரித்தார்.
இதுதவிர மேலும் பல நிகழ்ச்சிகளிலும் பவுன்சர்களால் ரசிகர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெறுகிறது. இதனை கண்டிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், தற்போது சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சந்திரமுகி 2 படக்குழு தரப்பில் இருந்து இதுவரை விளக்கம் கொடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











