Chandramukhi 2 Box Office: 5 நாள் லீவு.. சூரமொக்கையாக இருந்தாலும் சந்திரமுகி 2 சூப்பர் வசூல்!
சென்னை: சந்திரமுகி படத்துக்கு லொள்ளு சபா செய்தது போல சந்திரமுகி 2 படத்தை இயக்குநர் பி. வாசுவே இயக்கி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். ஆனாலும், கடந்த வாரம் கிடைத்த 5 நாள் விடுமுறையை டார்கெட் செய்து இந்த கொடுமையையும் மக்கள் சகித்துக் கொள்வார்கள் என்பது போல படத்தை ரிலீஸ் செய்து வசூலை அள்ளி உள்ளனர்.
ஜெயம் ரவியின் இறைவன் மற்றும் சித்தார்த்தின் சித்தா படங்கள் கலெக்ஷனை அள்ள தவறிய நிலையில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன் நடித்த சந்திரமுகி 2 வசூலில் மற்ற இரண்டு படங்களையும் ஓவர்டேக் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.

கங்கனா ரனாவத்துக்கு பாலிவுட்டிலேயே பலத்த அடி விழுந்து வந்த நிலையில், தமிழில் சந்திரமுகி 2 ட்ரோல்களுக்கு மத்தியில் முதல் வாரத்தில் கல்லா கட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பேய் பயமே வரல: சந்திரமுகி, அருந்ததி படங்கள் எல்லாம் இப்போது பார்த்தாலும் ரசிகர்களுக்கு ஒரு வித பயம் தொற்றிக் கொள்ளும் அந்த அளவுக்கு படம் உருவாக்கப்பட்டு இருக்கும். ஹாரர் பிஜிஎம் போட்டு அல்லு கிளப்பி இருப்பார்கள். சந்திரமுகி படமே மனோதத்துவ முறையில் கொடுக்கப்படும் ட்ரீட்மென்ட் படமாக இருந்தே ஹாரர் எஃபெக்ட் கொடுத்தது. ஆனால், ஒரிஜினல் சந்திரமுகி பேய் பீஸையே இறக்கி உள்ள நிலையிலும், சந்திரமுகி 2 படத்தில் பயமே வரவில்லை, அதே அளவுக்கு சந்திரமுகி படத்தில் இருந்த காமெடியும் இல்லை. ஸ்கூல் டிராமா போட்டது போல திரைக்கதையும் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து ரசிகர்களின் உயிரை உருவி விட்டனர்.
5 நாட்களில் வசூல் வேட்டை: கடந்த வியாழக்கிழமை மிலாடி நபி பண்டிகையை டார்கெட் செய்து சந்திரமுகி 2 வெளியான நிலையில், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் காந்தி ஜெயந்தி தினமான நேற்று என ஒட்டுமொத்தமாக குழந்தைகளின் காலாண்டு விடுமுறை மற்றும் லாங் வீக்கெண்ட்டை டார்கெட் செய்து வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் ஒட்டுமொத்தமாக 30 முதல் 35 கோடி வரை வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











