சந்திரமுகினா அது ஜோதிகா தான்.. கங்கனா கால் தூசுக்கு கூட வரல.. ஃபர்ஸ்ட் லுக்கால் கடுப்பான ஃபேன்ஸ்!

சென்னை: சந்திரமுகி 2 படம் வரும் விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், கங்கனா ரனாவத்தின் சந்திரமுகி லுக் தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் சந்திரமுகி 2 பிரம்மாண்டமாக லைகா தயாரிப்பில் உருவாகி உள்ளது.

Chandramukhi 2 first look out now and Jyothika vs Kangana Ranaut comparison starts on social media

ஆனால், ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் வேட்டையன் ராஜா லுக் மற்றும் கங்கனா ரனாவத்தின் சந்திரமுகி லுக் என எதுவுமே சுத்தமாக பிடிக்கவில்லை என ட்ரோல் செய்து வருகின்றனர்.

சந்திரமுகியாக மாறிய கங்கனா ரனாவத்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் உருவாகி உள்ள சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்துள்ளார். அவரது அழகான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ள நிலையில், ஜோதிகாவின் சந்திரமுகி லுக்குடன் கங்கனாவின் சந்திரமுகி லுக்கை ரசிகர்கள் கம்பேர் செய்து வருகின்றனர்.

Chandramukhi 2 first look out now and Jyothika vs Kangana Ranaut comparison starts on social media

ஜோதிகா தான் சூப்பர்: சந்திரமுகி என்றாலே ஜோதிகா தான் நினைவுக்கு வராங்க, பீரியட் போர்ஷன் குறைவாக ஒரு பாடல் காட்சியிலேயே வந்து சென்றாலும், சந்திரமுகியாக ஜோதிகா மிரட்டியிருந்தாங்க. ஆனால், கங்கனா ரனாவத்தை எப்படி பார்த்தாலும் சந்திரமுகி ஃபீலிங் வரலை, மாறாக மணிகர்ணிகாவின் ஆரம்ப காட்சியில் நடித்தது தான் நினைவுக்கு வருகிறது என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Chandramukhi 2 first look out now and Jyothika vs Kangana Ranaut comparison starts on social media

கங்கனா செம அழகு: ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் கங்காவாக நடித்த ஜோதிகா தன்னை சந்திரமுகியாக கற்பனை செய்துக் கொள்வார். ஆனால், இந்த படத்தில் சந்திரமுகியாக கங்கனா ரனாவத் கண்டிப்பாக கலக்குவார் என தெரிகிறது. தலைவி படத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் கங்கனா ரனாவத் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி விநாயகர் சதுர்த்திக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக சந்திரமுகி 2வை மாற்றுவார். அவரது லுக்கில் அப்படியே ராயல் கலை தெரிகிறது என கங்கனா ரசிகர்கள் சந்திரமுகி 2 லுக்கை கொண்டாடி வருகின்றனர்.

Chandramukhi 2 first look out now and Jyothika vs Kangana Ranaut comparison starts on social media

என்ன கொடுமை சரவணன்: இவங்க தான் சந்திரமுகியா? என்ன கொடுமை சரவணன் என சந்திரமுகி வசனத்தை வைத்தே ஏகப்பட்ட மீம்களை நெட்டிசன்கள் பறக்கவிட்டு வருகின்றனர். சந்திரமுகினா அது ஜோதிகா தான். கங்கனா ரனாவத் கால் தூசுக்கு கூட வரல, கண்டிப்பா இந்த படம் ஓடுவது கஷ்டம் தான். ஏற்கனவே வேட்டையன் லுக்கில் ராகவா லாரன்ஸை ஜீரணிக்க முடியல, இப்போ இது வேறயா என ட்ரோல்கள் பறக்கின்றன.

Chandramukhi 2 first look out now and Jyothika vs Kangana Ranaut comparison starts on social media

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X