அப்பாவை இழந்த அந்த வலி.. உதவி செய்த சூப்பர் ஸ்டார்.. ராகவா லாரன்ஸ் அம்மாவின் உருக்கமான பேட்டி!

சென்னை: 15 வயதிலேயே அப்பாவை இழந்து ராகவா லாரன்ஸ் பல வலிகளை அனுபவித்தார் என்று அவரது அம்மா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

2005ம் ஆண்டு வெளியான சந்திரமுகி முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இப்படத்தில் ரஜினி,ஜோதிகா, பிரபு, வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர்.

chandramukhi 2 hero raghava lawrence mother emotional interview

இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் நேற்று திரையரங்கில் வெளியானது. பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத், வடிவேலு நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

15 வயதில் அப்பாவை இல்ல: இந்நிலையில், ராகவா லாரன்ஸின் தாயார் யூடியூப் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,ராகவாவிற்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். அவருக்கு 15 வயதில் இருக்கும் போதே, அவரது அப்பா உடல்நலக்குறைவு காரணமாக இறந்தவிட்டார்.

பஸ்ஸூக்கு கூட காசு இல்ல: இதனால், குடும்பத்திற்கான வேலைக்கு சென்றேன், வேலைக்கு போக பஸ்ஸூக்கு கூட காசு இருக்காது, இதனால் தினமும் 4 கிலோமீட்டர் நடந்துதான் வேலைக்கே போவேன். இதைஎல்லாத்தையும் பார்த்து லாரன்ஸ் ரொம்ப வருத்தப்படுவார். அப்பா அல்லாமல் சாப்பாட்டுக்கு காசு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டோம், என் தம்பி,என் அம்மா எல்லாம் உதவி செய்தார்கள்.

படிப்பை நிறுத்தினார்: ஒரு கட்டத்தில் குடும்பத்தை சமாளிக்க முடியாததால், லாரன்சால் படிப்பை தொடரமுடியாமல் போனது, அவருக்கு டான்ஸ் மீது ஈடுபாடு இருந்ததால், டான்சர்ஸ் கார்டு வாங்கிக் கொடுத்து அதில் சேர்த்துவிட்டேன். டான்சர்ஸ் கார்டு வாங்கக் கூடா என் கையில் காசு இல்லை. அப்போது பைட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் பணம் கொடுத்து உதவி செய்தார்.

chandramukhi 2 hero raghava lawrence mother emotional interview

உதவி செய்த ரஜினி: அப்போது, லாரன்சுக்கு படத்த்தில் டான்ஸ் ஆடும் வாய்ப்பே வரவில்லை. வாய்ப்பு கேட்டு போன இடத்தில் எல்லாம், இவ்வளவு கருப்பா இருக்கா என்று அனுப்பிவிட்டார்கள். அப்போது தான் சூப்பர் சுப்புராயன் என்கூடவா என்று லாரன்சை படப்பிடிப்புக்கு அழைத்து சென்றார். அப்போது தான் ரஜினி, லாரன்சை வீட்டுக்கு வரவைத்து சிபாரிசு கடிதம் கொடுத்தார் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் குறித்து அவரது அம்மா மனம் திறந்து பல விஷங்களை பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X