Chandramukhi 2: “வடிவேலு இல்லையென்றால் சந்திரமுகியே கிடையாது..” அப்போ காமெடி தர்பார் கன்ஃபார்ம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பி வாசு இயக்கிய சந்திரமுகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய இசையமைப்பாளர் கீரவாணி, வடிவேலு இல்லையென்றால் சந்திரமுகியே கிடையாது என தெரிவித்துள்ளார்.

வடிவேலு இல்லையென்றால் சந்திரமுகியே கிடையாது : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. சிவாஜி பிலிம்ஸ் சார்பில் பிரபுவின் குடும்பத்தினர் தயாரித்த இந்தப் படத்தை பி வாசு இயக்கியிருந்தார். ரஜினியுடன், வடிவேலு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். காமெடி ப்ளஸ் ஹாரர் ஜானரில் உருவான சந்திரமுகி மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது உருவாகியுள்ளது. ஆனால், இதில் ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சந்திரமுகி முதல் பாகத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்த நிலையில், 2ம் பாகத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையமைத்துள்ளார்.
லைகா தயாரித்துள்ள சந்திரமுகி 2, செப்டம்பர் 15ம் தேதி வெளியாகிறது. இதனிடையே இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. அதில் ராகவா லாரன்ஸ், பி வாசு, வடிவேலு, கங்கனா ரனாவத், கீரவாணி, லைகா சுபாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சந்திரமுகி 2 பாடல்களை வெளியிட்ட படக்குழு, சந்திரமுகி 2 படம் குறித்து பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொண்டது.

அப்போது பேசிய கீரவாணி, சந்திரமுகி 2 படத்தில் பணிபுரிந்தது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், சந்திரமுகி 2 நிச்சயம் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கும் எனவும் கூறினார். சந்திரமுகி முதல் பாகத்தில் வடிவேலுவின் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதேபோல், இரண்டாம் பாகமும் ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும் எனக் கூறினார்.
சந்திரமுகி 2ம் பாகத்தை முதல் முறை பார்க்கும் ரசிகர்கள், வடிவேலுவின் காமெடியை பயங்கரமாக ரசிப்பார்கள். அதனால், மீண்டும் மீண்டும் சந்திரமுகி 2ம் பாகம் பார்க்க தியேட்டருக்கு படையெடுப்பார்கள் என கீரவாணி தெரிவித்துள்ளார். ஏற்கனவே சந்திரமுகி 2வில் வடிவேலுவின் காமெடி தாறுமாறாக வந்துள்ளது என படக்குழுவினர் கூறியிருந்தனர். இப்போது இந்தப் படத்தின் ரீ ரெக்கார்டிங்கில் வடிவேலுவின் காமெடியை பார்த்து கீரவாணியும் பாராட்டியுள்ளது படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











