Chandramukhi 2 - ஹிட் கன்ஃபார்ம்தான் போல... டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் சந்திரமுகி 2
சென்னை: Chandramukhi 2 (சந்திரமுகி 2) சந்திரமுகி 2 படம் நாளை வெளியாகவிருக்கும் சூழலில் அதற்கான டிக்கெட்டுகள் வேகமாக நிரம்பிவருகின்றன.
மலையாளத்தில் முதலில் பாசில் இயக்கத்தில் மணிசித்திரதாழு என்ற படத்தின் ரீமேக் உரிமையை பெற்று பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் எடுத்தார். பிறகு கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன் தாரா உள்ளிட்டோரின் நடிப்பில் தமிழில் வெளியானது. 800 நாள்களுக்கு மேல் ஓடி பெரும் சாதனை படைத்தது. சாதாரண பேய் பட லைனாக இருந்தாலும் பி.வாசுவின் மேக்கிங் படத்தில் அதகளமாக இருந்தது. இதனால் அப்போதைய கிட்ஸுக்கு சந்திரமுகி எப்போதுமே ஃபேவரைட்.

முக்கியத்துவம் வாய்ந்த சந்திரமுகி: ரஜினிகாந்த் கதை, திரைக்கதையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாபா ரஜினியின் கரியரில் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. இதனால் ரஜினிக்கு பெரும் நெருக்கடியும் உருவானது. இப்படிப்பட்ட சூழலில் பி.வாசு சந்திரமுகி கதையுடன் ரஜினியிடம் சென்றார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் அதில் ரஜினி நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டாகி ரஜினிக்கு சினிமாவில் மறுவாழ்வு கொடுத்தது.
ஜோதிகா: படத்தின் வெற்றிக்கு பாடல்கள், வடிவேலுவின் காமெடி எல்லாம் உதவின. இருப்பினும் படத்தில் குறிப்பிடப்பட வேண்டியது ஜோதிகாவின் நடிப்பை. கங்கா என்ற கதாபாத்திரத்தில் சாந்தமாக இருக்கும் ஜோதிகா சந்திரமுகி கதாபாத்திரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். சந்திரமுகியாக அவர் காட்டிய முக பாவனைகள், வசன உச்சரிப்புகள் என அனைத்தும் ஜோதிகா எனும் மிகச்சிறந்த நடிகையை நீண்ட நாள்கள் கழித்து ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது.

சந்திரமுகி 2: இந்தச் சூழலில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இதில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய மார்க் ஆண்டனி ரிலீஸானதால் சந்திரமுகி 2 ரிலீஸாகவில்லை என கூறப்பட்டது. ஆனால் பி.வாசுவோ நூற்றுக்கும் அதிகமான காட்சிகள் காணாமல் போனதால்தான் ரிலீஸுக்கு தாமதம் என தெரிவித்திருக்கிறார்.
டிக்கெட் புக்கிங்: இந்நிலையில் எல்லா சிக்கல்களையும் கடந்து படம் நாளைக்கு ரிலீஸாகவிருக்கிறது. இதனையடுத்து படத்துக்கான டிக்கெட் புக்கிங்கில் டிக்கெட்டுகள் வேகமாக நிரம்பிவருகின்றன. அதன்படி சென்னையில் புக் மை ஷோவில் பார்த்தால் சென்னை ரோகிணி தியேட்டரில் காலை 9 மணி ஷோவுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் புக்காகிவிட்டன.
அதேபோல் ஐநாக்ஸ், பிவிஆர் ஆகிய திரையரங்குகளிலும் பெரும்பாலும் டிக்கெட்டுகள் புக்காகிவிட்டன. அதேபோல் சத்யம், காசி உள்ளிட்ட திரையரங்குகளிலும் இன்னும் சில டிக்கெட்டுகளே மீதம் இருக்கின்றன. அவையும் விரைவில் புக் ஆகிவிடும். பிற காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் விறுவிறுவென்று காலியாகிவருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிற மாவட்டங்களிலும் டிக்கெட்டுகள் தீர்ந்துவருகின்றனவாம். இதனை கவனித்த படக்குழு இப்போது செம ஹேப்பியாக இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











