சந்திரமுகி 2 படத்தோட அடுத்தக்கட்ட சூட்டிங்.. எங்க -எப்போ துவங்குது தெரியுமா.. தெரிஞ்சிக்கலாம் வாங்க!
சென்னை : ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் சந்திரமுகி 2.
இந்தப் படத்தின் சூட்டிங் முன்னதாக மைசூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த நிலையில், 3வது கட்ட சூட்டிங்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு படக்குழு நிறைவு செய்துள்ளது.
இந்தப் படப்பிடிப்பில் கங்கனா ரணாவத், லாரன்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன.

சந்திரமுகி படம்
நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் சந்திரமுகி. ரஜினிகாந்தின் கேரியரில் பெஸ்ட் படங்களில் இதுவும் ஒன்று. படத்தை பிரபல இயக்குநர் பி வாசு இயக்கியிருந்தார். கதைக்களம் மிகவும் மிரட்டலாக அமைந்திருந்தது.

சந்திரமுகி 2 படம்
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்த நிலையில், தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் உருவாகி வருகிறது. படத்தில் லாரன்சுடன் கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு என நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது.

ராதிகா இன்ஸ்டாகிராம் பதிவு
முன்னதாக படத்தின் சூட்டிங் மைசூரு, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடத்தப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் அடுத்தக்கட்ட ஷெட்யூல் நிறைவடைந்தது. இதுகுறித்து ராதிகா சரத்குமாரும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

மும்பைக்கு செல்லும் படக்குழு
ராமோஜி பிலிம் சிட்டியில் கடந்த வியாழக்கிழமை இந்த சூட்டிங் நடந்து முடிந்தது. இதனிடையே படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக தற்போது படக்குழுவினர் மும்பை செல்லவுள்ளனர். வரும் மார்ச் 1ம் தேதி இந்த அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங்கை முடிக்க பி வாசு திட்டமிட்டுள்ளார்.

படமாக்கப்படும் க்ளைமாக்ஸ் காட்சிகள்
இதனிடையே படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள்தான் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். அதனால் விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தில் இணைந்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

18 ஆண்டு இடைவெளி
பி வாசுவின் சந்திரமுகி படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆகியும், இப்போதும் அந்தப் படத்தை விரும்பாத ரசிகர்களே இருக்க முடியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு ரஜினியின் ஸ்டைல், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு, நயன்தாராவின் ப்ரெஷ்னஸ், வடிவேலு காமெடி என படத்தில் குறிப்பிட்டு சொல்ல பல சிறப்புகள் உள்ளன. அவற்றையெல்லாம் இந்த சந்திரமுகி 2 படம் நிறைவு செய்யுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











