Chandramukhi 2 Trailer - 200 வருடத்து பகை.. வெளியானது சந்திரமுகி 2 ட்ரெய்லர்.. இருந்தாலும் அது போல இல்லப்பா

சென்னை: Chandramukhi 2 Trailer (சந்திரமுகி 2 ட்ரெய்லர்) சந்திரமுகி 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

மலையாளத்தில் முதலில் பாசில் இயக்கத்தில் மணிசித்திரதாழு என்ற படத்தின் ரீமேக் உரிமையை பெற்று பி.வாசு ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் எடுத்தார். பிறகு கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன் தாரா உள்ளிட்டோரின் நடிப்பில் தமிழில் வெளியானது. 800 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் சாதனை படைத்தது. சாதாரண பேய் பட லைனாக இருந்தாலும் பி.வாசுவின் மேக்கிங் படத்தில் அதகளமாக இருந்தது. இதனால் அப்போதைய கிட்ஸுக்கு சந்திரமுகி எப்போதுமே ஃபேவரைட்.

Chandramukhi 2 Movie Trailer was out Now

முக்கியத்துவம் வாய்ந்த சந்திரமுகி: ரஜினிகாந்த் கதை, திரைக்கதையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாபா ரஜினியின் கரியரில் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. இதனால் ரஜினிக்கு பெரும் நெருக்கடியும் உருவானது. இப்படிப்பட்ட சூழலில் பி.வாசு சந்திரமுகி கதையுடன் ரஜினியிடம் சென்றார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் அதில் ரஜினி நடித்தார்.

ஜோதிகா: படத்தின் வெற்றிக்கு பாடல்கள், வடிவேலுவின் காமெடி எல்லாம் உதவின. இருப்பினும் படத்தில் குறிப்பிடப்பட வேண்டியது ஜோதிகாவின் நடிப்பை. கங்கா என்ற கதாபாத்திரத்தில் சாந்தமாக இருக்கும் ஜோதிகா சந்திரமுகி கதாபாத்திரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். சந்திரமுகியாக அவர் காட்டிய முக பாவனைகள், வசன உச்சரிப்புகள் என அனைத்தும் ஜோதிகா எனும் மிகச்சிறந்த நடிகையை நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது.

Chandramukhi 2 Movie Trailer was out Now

சந்திரமுகி 2: இந்தச் சூழலில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இதில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது. படமானது செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ட்ரெய்லர்: இந்நிலையில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாக ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே சந்திரமுகி கதை நடந்த பங்களாவில்தான் இந்தப் படத்தின் கதையும் நகர்கிறது. லாரன்ஸ் வேட்டையனாகவும், கங்கனா ரணாவத் சந்திரமுகியாகவும் நடித்திருக்கின்றனர். ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் முதல் பாகம் போல வருமா என்ற சந்தேகத்தை கிளப்ப ஆரம்பித்திருக்கின்றனர்.

Chandramukhi 2 Movie Trailer was out Now

அதுமட்டுமின்றி சந்திரமுகி கெட் அப் கங்கனாவுக்கு கொஞ்சம்தான் பொருந்தியிருக்கிறது என்றும்; வேட்டையன் கதாபாத்திரத்தை ரஜினி அளவுக்கு லாரன்ஸ் செய்திருக்கமாட்டாரோ என்ற சந்தேகம் ட்ரெய்லரை பார்க்கும்போது வருவதாகவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். இருப்பினும் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X