Chandramukhi 2: போட்டியை சமாளிக்க முடியாது... ரிலீஸில் இருந்து பின்வாங்கும் சந்திரமுகி 2!

சென்னை: ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் சந்திரமுகி 2. லைகா தயாரிப்பில் பி வாசு இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 15ம் தேதி வெளியாகவிருந்தது.

அதேநாளில் ராகவா லாரன்ஸின் மார்க் ஆண்டனி உள்ளிட்ட மேலும் சில படங்கள் ரிலீஸாகவுள்ளன. இந்நிலையில், திடீரென சந்திரமுகி 2 ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 Chandramukhi 2: Raghava Lawrence Chandramukhi 2 release postponed on September 28

சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி மாற்றம்: ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ள சந்திரமுகி 2 படத்தை பி வாசு இயக்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் இது உருவாகியுள்ளது. ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ள இந்தப் படத்தையும் பி வாசுவே இயக்கியுள்ளார். ராகவா லாரன்ஸுடன் வடிவேலு, கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லைகா தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ட்ரெய்லரும் வெளியானது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள காமெடி காட்சிகள், ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. சந்திரமுகி 2 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதேநாளில் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படமும் ரிலீஸாகிறது. சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதனால், சந்திரமுகி 2, மார்க் ஆண்டனி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே நேற்று வெளியான ஷாருக்கானின் ஜவான் திரைப்படமும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், அடுத்த வாரமும் ஜவான் ஃபீவர் கன்ஃபார்ம் எனத் தெரிகிறது.

இதன் காரணமாக சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்தப் படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தேதியில் பிரபாஸின் சலார் திரைப்படம் வெளியாகவிருந்தது. ஆனால், சலார் ரிலீஸ் தேதி நவம்பர் மாதத்திற்கு சென்றுவிட்டதால், இப்போது சந்திரமுகி 2 செப்டம்பர் 28ல் ரிலீஸாகும் எனத் தெரிகிறது.

அதேநேரம் சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து லைகா தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. மேலும், இந்தப் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இன்னும் முடியாததால் தான் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X