Chandramukhi 2 - சந்திரமுகி 2.. முடிந்தது ஷூட்டிங்- தங்க மோதிரம் பரிசளித்த லாரன்ஸ்

சென்னை: Chandramukhi 2 (சந்திரமுகி 2) பி.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் முடிவடைந்திருக்கிறது.

ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு நடிப்பில் பி.வாசு இயக்கிய படம் சந்திரமுகி. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் 800 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் சாதனை படைத்தது. அந்தப் படத்தை இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் அமர்ந்து பார்க்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

Chandramukhi 2 Shooting Wrapped Up Says Radhika Sarathkumar

ரஜினிக்கு மறுவாழ்வு:

ரஜினிகாந்த் கதை, திரைக்கதையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம் பாபா. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் ரஜினியின் கேரியரில் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. இதனால் ரஜினிக்கு பெரும் நெருக்கடியும் உருவானது. இப்படிப்பட்ட சூழலில் பி.வாசு சந்திரமுகி கதையுடன் ரஜினியிடம் சென்றார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் அதில் ரஜினி நடித்தார். சமீபத்திய பேட்டியில்கூட ஜோதிகா அதை நினைவுகூர்ந்து ரஜினியை பாராட்டியிருந்தார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டாகி ரஜினிக்கு சினிமாவில் மறுவாழ்வு கொடுத்தது.

சந்திரமுகியாக நடித்து மிரட்டிய ஜோதிகா:

படத்தின் வெற்றிக்கு பாடல்கள், வடிவேலுவின் காமெடி எல்லாம் உதவின. இருப்பினும் படத்தில் குறிப்பிட வேண்டியது ஜோதிகாவின் நடிப்பை. கங்கா என்ற கதாபாத்திரத்தில் சாந்தமாக இருக்கும் ஜோதிகா சந்திரமுகி கதாபாத்திரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். சந்திரமுகியாக அவர் காட்டிய முக பாவனைகள், வசன உச்சரிப்புகள் என அனைத்தும் ஜோதிகா எனும் மிகச்சிறந்த நடிகையை நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது.

Chandramukhi 2 Shooting Wrapped Up Says Radhika Sarathkumar

சந்திரமுகி 2வை இயக்கும் பி.வாசு:

இந்தச் சூழலில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இதில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்தது. இப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் ஜோதிகா நடித்திருந்த நடிப்புக்கு ஈடாக கங்கனா இரண்டாம் பாகத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

எப்போது ரிலீஸ்:

படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிவடைந்திருக்கிறது பாக்கி இருக்கும் காட்சிகளை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்திரமுகி 2 படமானது விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 14ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Chandramukhi 2 Shooting Wrapped Up Says Radhika Sarathkumar

ஷூட்டிங் நிறைவு:

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவந்த சூழலில் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த அவர், படத்தின் ஷூட்டிங் முடிந்துவடைந்துவிட்டது. எனக்கு தங்க மோதிரத்தையும், கடிகாரத்தையும் பரிசாக கொடுக்கும் முதல் ஹீரோ லாரன்ஸ் என கூறியிருக்கிறார். முன்னதாக, வடிவேலு ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசும் வீடியோவை ராதிகா பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X