Chandramukhi 2: சந்திரமுகி 2 வெற்றிபெற ரஜினி வாழ்த்து... அந்த ஒரு வார்த்தை போதும் தலைவரே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் சந்திரமுகி. பி வாசு இயக்கிய இந்தப் படம் 2005ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2, நேற்று திரையரங்குகளில் வெளியானது. பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 வெற்றிபெற சூப்பர் ஸ்டார் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 Chandramukhi 2: Superstar Rajini wishes Chandramukhi 2 success

சந்திரமுகி 2 குழுவினருக்கு ரஜினி வாழ்த்து: சூப்பர் ஸ்டார் ரஜினி கேரியரில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற படங்களில் சந்திரமுகி மிக முக்கியமானது. பி வாசு இயக்கிய இந்தப் படம் 2005ம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. ரஜினியுடன் ஜோதிகா, வடிவேலு, பிரபு, நாசர், வினீத், நயன்தாரா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

சந்திரமுகி படத்தில் ரஜினி - வடிவேலு காமெடியும், ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பும் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்தது. இதனால், ரிப்பீட்டட் ஆடியன்ஸ்களால் சந்திரமுகி 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியது. இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகியுள்ளது. சந்திரமுகி 2-வையும் பி வாசுவே இயக்க, ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.

அவருடன் வடிவேலு, கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் சந்திரமுகி 2-வில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள சந்திரமுகி 2 அதிக எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியானது. ஆனால், படம் பார்த்த ரசிகர்களோ பெரும் கதறல்களுடன் தியேட்டரை விட்டு வெளியேறுகின்றனர். பி வாசு சந்திரமுகி 2ம் பாகம் எடுக்காமலேயே இருந்திருக்கலாம் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ், கங்கன ரனவாத் நடிப்பு, வடிவேலுவின் காமெடி, ஹாரர் என படத்தில் எதுவுமே ஒர்க்அவுட் ஆகவில்லை என்று பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இதனால் சந்திரமுகி 2 படத்தின் வசூலும் சொல்லிக் கொள்ளும்படி இல்லையென பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், சந்திரமுகி 2 வெற்றிபெற சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "மிகப் பெரிய வெற்றிப் படமான தன்னுடைய சந்திரமுகியை, புதிதாக, வேறு ஒரு கோண்டத்தில், ஒரு பிரம்மாண்டமான பொழுதுப்போக்குப் படமாக, சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர் திரு வாசு அவர்களுக்கும், அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும்... மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் இந்த கடிதத்தை லைகா நிறுவனம் தனது டிவிட்டரில் ஷேர் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. சந்திரமுகி 2 படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், ரஜினி வாழ்த்துத் தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கே ஷாக்கிங்காக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X