Chandramukhi 2: நாளை வெளியாகும் சந்திரமுகி 2 இரண்டாவது பாடல்.. ப்ரமோவே க்யூட்டா இருக்கே!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் சந்திரமுகி 2.

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்தப் படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களை சிறப்பாக நடத்தி வருகிறது படக்குழு.

இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், பர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மாஸ் காட்டியது.

Chandramukhi 2 team announces that second single of the movie released tomorrow

சந்திரமுகி 2 படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை வெளியீடு: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் சந்திரமுகி 2. இந்தப் படத்தின் முதல் பாகம் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என ப்ரெஷ்ஷாக சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு படத்தின் இரண்டாவது பாகம் தற்போது வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். ரஜினிக்கு பதிலாக இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.

இந்தப் படத்தின் சூட்டிங் மைசூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான அரண்மனைகளிலும் அரண்மனை செட் போடப்பட்டும் எடுக்கப்பட்டது. படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகளில் பி வாசு மிகுந்த கவனம் செலுத்தி படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப்படம் வரும் விநாயகர் சதுர்த்யையொட்டி வெளியாகவுள்ளது. படத்தில் லாரன்சின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து கங்கணா ரனாவத்தின் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலில் இளவரசி கெட்டப்பில் கங்கணா காணப்பட்டார். படத்திற்கு ஆஸ்கர் நாயகன் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்தப் படம் பல நாட்கள் தன்னை தூங்கவிடாமல் வேலை செய்ய வைத்ததாக அவர் தனது பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அறிவிப்பு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளை மாலை இந்த இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளதாக ப்ரமோவுடன் படக்குழு அறிவித்துள்ளது. பாட்டுக்கட்டு என்று துவங்கும் இந்தப் பாடலின் இந்தப் ப்ரமோவில், கீரவாணி, பி வாசு உள்ளிட்டவர்கள் காணப்படுகின்றனர். பாடலுக்கான முயற்சியை அவர்கள் மேற்கொள்வதாக இந்த ப்ரமோவில் காணப்படுகிறது. மேலும் ராகவாவும் இந்தப் பாடலில் நடனமாடுவதாக காணப்படுகிறார்.

நாளை மாலை 5 மணிக்கு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது லாரன்ஸ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சந்திரமுகி 2 படம் அவரது கேரியரில் பெஸ்ட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக வெளியான இந்தப் படத்தின் முதல் பாகம் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது பாகத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X