Chandramukhi 2 Trailer Review: என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை.. ஒரு சீனும் நல்லா இல்லையே!

சென்னை: ஒரு படம் நல்லா இருக்கோ இல்லையோ அதன் ட்ரெய்லர் கட் பார்த்தாலாவது படத்தை பார்க்க தூண்டும் விதத்தில் இருக்க வேண்டும். ஆனால், சந்திரமுகி 2 ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ள நிலையில், ஒரு கூஸ்பம்ப்ஸ் சீன் கூட இல்லையே என்பது தான் வேதனையாக உள்ளது.

ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா படங்களின் ட்ரெய்லர் எடிட்டை எல்லாம் இப்போ போட்டு பார்த்தால் கூட மிரட்டலாக இருக்கும். ஆனால், விரைவில் வெளியாக உள்ள சந்திரமுகி 2 படத்தின் ட்ரெய்லர் கொஞ்சம் கூட சுவாரஸ்யமே இல்லாமல் உள்ளது.

Chandramukhi 2 Trailer Review in Tamil

மீண்டும் முருகேசன் கதாபாத்திரத்தில் வடிவேலுவை காட்டும் போதாவது சிரிப்பு வரும் என்று பார்த்தால் அதுவும் மிஸ்ஸாகி விட்டது.

3 வருஷம் ஓடிய சந்திரமுகி: இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, மாளவிகா, நாசர், வினீத் உள்ளிட்ட பலர் நடித்த சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியதோடு ரிப்பீட் ஆடியன்ஸை தியேட்டருக்கு திரும்ப திரும்ப வர வைத்து கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஓடியது.

ஆனால், இப்போ ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படமே ஒரு மாதத்துக்குள் ஓடிடியில் வந்து விடும் நிலையில், ஒரு மாத காலமாவது தியேட்டரில் ரசிகர்களை கட்டிப்போடும் அளவுக்கு ஒரு படமாக சந்திரமுகி 2 வருமா என எதிர்பார்த்தால், நிச்சயம் ஏமாற்றம் என்பது போலத்தான் ட்ரெய்லர் உள்ளது.

பயமே இல்லை: சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் காமெடி எல்லாம் சிரிக்க வைத்தாலும், ஜோதிகா சந்திரமுகியாக வரும் சீன் காட்டும் போதெல்லாம் உடம்பை சிலிர்க்க வைக்கும் அளவுக்கு பயம் தொற்றிக் கொள்ளும்.

அதிலும் அந்த கட்டிலை தூக்கிக் கொண்டு பிரபுவை மிரட்டும் காட்சியெல்லாம் வேறலெவல் மிரட்டல். ஆனால், சந்திரமுகி 2 படத்தில் எந்தவொரு காட்சியிலும் திகிலூட்டும் படமாக இது இருக்கும் எனத் தோன்றவில்லை. பீரியட் போர்ஷனில் வேட்டையனாக ராகவா லாரன்ஸை காட்டும் போதெல்லாம் குபீரென சிரிக்கத்தான் தோன்றுகிறது.

சன்னிலியோன் படம்: சமீபத்தில் சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தின் பீரியட் போர்ஷன் போல சந்திரமுகி மற்றும் வேட்டையனை காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சன்னி லியோன் நீச்சல் குளத்தில் குளிப்பது போலவே கங்கனா ரனாவத் நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியும் அமைந்துள்ளது.

Chandramukhi 2 Trailer Review in Tamil

நடிகர்கள் மாற்றம் என்றாலும் திரைக்கதை விறுவிறுப்பாகவும் ரசிகர்களை கட்டிப் போடும் அளவுக்கு திகில் கூட்டினாலே சந்திரமுகி 2 ஹிட் அடித்து விடும். ஆனால், ட்ரெய்லரை பொறுத்தவரையில் செப்டம்பர் 15ம் தேதி ரிலீஸுக்கு ப்ரீ புக்கிங் ஹவுஸ்ஃபுல் ஆகுமா என்பது சந்தேகம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X