சந்திரமுகி படத்தில் இப்படியொரு சீன் இருந்ததா?.. நல்லவேளை தூக்கிட்டாங்க.. இல்லைன்னா பாபா நிலைமை தான்!
சென்னை: பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் பேசிய டெலிட்டட் சீன் ஒன்றை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தீயாக ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
சந்திரமுகி படத்தை பேய் படமாக காட்டாமல் மனோதத்துவ முறையில் டாக்டர் சரவணன் கங்காவை எப்படி குணப்படுத்துகிறார் என்பதை காட்டியிருப்பார்கள்.

அதுதான் சந்திரமுகி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கே காரணமாக அமைந்திருக்கும். ஆனால், தற்போது அதிகம் ஷேர் செய்யப்பட்டு வரும் டெலிட்டட் சீன் இருந்திருந்தா படமே ஓடியிருக்காது என கலாய்த்து வருகின்றனர்.
சூப்பர்ஸ்டாரின் சந்திரமுகி: மணிச்சித்ரதாழு என மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான படத்தை கன்னடத்தில் ஆப்தமித்ரா என ரீமேக் செய்தனர். அந்த படத்தைத் தான் 2005ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரமுகியாக பி. வாசு இயக்கினார். ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர், சோனு சூட், வினீத், மாளவிகா என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்த அந்த திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியது.
ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2: சுமார் 17 வருஷம் கழித்து வெளியான சந்திரமுகி 2 படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். ஒட்டுமொத்த முதல் பாக நடிகர்களும் மாற்றப்பட்டு புதிய நடிகர்கள் நடித்துள்ளனர். வடிவேலுவின் முருகேசன் கதாபாத்திரம் மட்டும் இந்த படத்தில் அப்படியே கன்டினியூ ஆகிறது. கங்கனா ரனாவத் இந்த படத்தில் சந்திரமுகியாக நடித்து மிரட்டியுள்ளார்.

சந்திரமுகி டெலிடட் சீன்: சந்திரமுகி 2 வெளியாகி உள்ள நிலையில், சந்திரமுகி படத்தின் டெலிடட் சீன் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் பரவி வருகிறது. அந்த காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் ஆச்சார்யா ஏன் வேட்டயபுர அரண்மனையில் தங்கவில்லை என்பதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பது போல பேய், பிசாசு, பூதம் எல்லாமே இருப்பது உண்மை தான் என்றும் மனோதத்துவ ரீதியாக நான் சந்திரமுகியை விரட்டுகிறேன். ஆச்சார்யா மாந்திரீக ரீதியாக ஓட்டுவார் என பேசியிருந்த காட்சிகளைத்தான் படத்தில் இருந்து கடைசி நேரத்தில் தூக்கி விட்டனர்.
பாபா நிலைமை ஆகியிருக்கும்: பூமர் வசனங்கள் என்றும் நல்லவேளை அந்த காட்சிகளை கடைசி நேரத்தில் பி. வாசு படத்தில் இருந்து தூக்கி விட்டார். இல்லை என்றால் ரஜினிகாந்தின் பாபா படத்துக்கு ஏற்பட்ட நிலைமை தான் சந்திரமுகிக்கும் நடந்திருக்கும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











