சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் குழந்தையாக நடித்த பிரகர்ஷிதா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா
மலையாளத்தில் மோகன்லால் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான மணிச்சித்திரதாழ் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து,
இத்திரைப்படம் தமிழில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு சந்திரமுகி என்ற பெயரில் வெளியானது. இப்படம் திரையரங்கில் பல நாட்கள் ஓடி வசூலை அள்ளியது.

சந்திரமுகி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அட்டகாசமான நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு. வினித் உள்ளிட்ட நடித்திருந்தனர். நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் விமர்சனத்தை அள்ளிய இத்திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் தான் பிரகர்ஷிதா.
பொம்மி: அவர் அந்த படத்தில் இடம் பெற்ற அத்திந்தோம் என்ற பாடலில் ரஜினியுடன் சேர்ந்து பிரகர்ஷிதாவும் பாடுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். மிகவும் பிரபலமான இந்த பாடலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். இவர் இதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக வேலன், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து இருந்தாலும் சந்திரமுகி திரைப்படம் இவருக்கு பெயரை பெற்றுத்தந்தது.

எப்படி இருக்கிறார் தெரியுமா: குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த பிரகர்ஷிதா இப்போது நன்று வளர்ந்து குமரி பெண்ணாக மாறி உள்ளார். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு, ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் நடந்த நிலையில், தற்போது பிரகர்ஷிதாவுக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது. குடும்பம் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சந்திரமுகி 2: சந்திரமுகி படத்தின் வெற்றியைத் தொடந்து சந்திரமுகி இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். ஜோதிகா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். மேலும், ராதிகா சரத்குமார், வடிவேலு என பலர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் விநாயகர் ஜெயந்திக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











