ஆத்தாடி... சந்திரமுகி சொர்ணாவா இது.. ஹாலிவுட் ஹீரோயின் போல அப்படி ஒரு அழகு!

சென்னை: சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த சொர்ணா இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மொத்தமாக மாறி இருக்கிறார்.

2005ம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானத் திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு,நாசர், மாளவிகா, வினீத் என பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

Chandramukhi movie Vadivelu wife swarna latest photo

இத்திரைப்படம் தியேட்டரில் பல நாட்களுக்கு ஓடி வசூலை அள்ளியது.

நடிகர் வடிவேலு: சந்திரமுகி திரைப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்தவர் தான் சொர்ணா. இந்த படத்திலும் சொர்ணா என்ற கேரக்டரிலேயே நடித்திருந்தார். அழகான மனைவி என்பதால், அவரை யாரும் பார்த்திடாதபடி, சொர்ணாவின் பின்னாடியே சுற்றிக்கொண்டு இருப்பார் வடிவேலு, படத்தில் இவரின் காமெடி ஹைலைட்டாக இருக்கும்.

நடிகை சொர்ணா: தாய் மனசு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சொர்ணா, தொடர்ந்து மாயாபஜார், கோகுலத்தில் சீதை, பெரியதம்பி, போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.அதன் பிறகு தெலுங்கு பக்கம் சென்ற சொர்ணா அங்கு ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் திருமணம் செய்து கொண்ட சொர்ணா, சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார்.

Chandramukhi movie Vadivelu wife swarna latest photo

ஹாலிவுட் நடிகை போல: இவர் சினிமாவை விட்டு விலகினாலும், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை அப்லோடு செய்து வருகிறார். மாடர்ன் உடையில் சொர்ணாவைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் சொர்ணாவா இது என்று கேட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு இளமையாக ஹாலிவுட் பட நடிகைப்போல இருக்கிறார்.

சொர்ணா இல்ல: பல ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தில் வடிவேலு நடித்திருக்கும் நிலையில், நேற்று நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவில், சொர்ணா இருக்காங்களா என ரசிகர்கள் கேட்டதற்கு, சொர்ணா இல்ல.. பெயிண்டர் கோபாலு தான் வர்றாரு என்று வடிவேலு பேசி இருந்தார். சந்திரமுகி படம் வெளியாகி இத்தனை ஆண்டு காலம் ஆனாலும், யாரும் சொர்ணாவை மறக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X